தமிழ் கவிதைகள்
-
இணைய இதழ் 100
அமுதசாந்தி கவிதைகள்
எதை நானும் மறக்க? கண்களில் சில துளிவெறுப்பையாவதுநீ சிந்தியிருக்கலாம்.அதனை ஏந்திக் கொண்டுஎளிதில் கடந்திருப்பேன்.நீயோ நேசத்தையல்லவாநிறைத்து வைத்திருந்தாய்.எப்படி நானும் மறப்பது..உன் மீதான கோபங்கள்கரைந்து வடிந்த பின்எஞ்சிய பேரன்பைவெறுக்கவும் முடியாமல்மறக்கவும் முடியாமல்..தினம் அல்லாடுகிறேன். • நட்சத்திர இரவு பேரண்ட வெடிப்பின்கருந்துளையாககாலத்தை நிறுத்தியும்பின்னோக்கி நகர்த்தியும்விழுங்க காத்திருக்கிறதுநினைவுகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ராணி கணேஷ் கவிதைகள்
ஆச்சியின் பேச்சு அன்றாட வேலைகளுக்கு நடுவேஅலைபேசியில் அழைத்தபோதுஆச்சி பேசிக்கொண்டே இருந்தாள்…முதல் ஐந்து நிமிடங்கள்,‘ஏன் இத்தனை நாளாய் பேசவில்லை,உடம்புக்கு முடியலையா?,அலுவல் அதிகமா?பிள்ளைகள் சுகம்தானே?’என கேள்விகளை அடுக்கிச் சென்றாள்.அதன்பின்னான நிமிடங்களில் தொடர்ச்சியாய்பேசிக்கொண்டே இருந்தாள்…ஆச்சியின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.பாதி அறிந்த விடயங்கள்தாம்,இரண்டு நாட்கள்முன்பே கூறியதை மறந்திருக்கக்கூடும்…என்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
மித்ரா அழகுவேல் கவிதைகள்
சாம்பல் மலர்கள் காளியின் கைகளில் கரண்டி சுழல்கிறதுயுத்தமும் வதமும் பழகிப் போனவள்தன்னுடனே போரிட்டுதன்னையே பலி கொடுக்கிறாள்சுயத்தை அரிந்துஅவள் தயாரிக்கும் உணவுகள்நேரந்தவறாமல் பரிமாறப்படுகின்றனஜ்வலிக்கும் தட்டுகளில்தன் கோரைப் பற்களைக் காட்டிவிடக் கூடாதெனஅவள் எடுத்திருப்பதுதற்காலிக முடிவுதான். • மஞ்சள் குங்குமம் மணக்க நடந்து வருகிறாள்அத்தைநடக்க நடக்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சுகன்யா ஞானசூரி கவிதைகள்
காதலும் காதல் நிமித்தமும் நம்பிரிவு தாளாதுவெக்கையேறிக் கிடக்கிறதுநிலம்வசந்தத்தின் பெருவாழ்வினைசூனியமாக்கிய சொற்கள்உதிர்ந்துக் கொண்டிருக்கின்றனமதர்த்துப் பொங்குகிறது கடல்கயலினங்களின் கூடுகைக்காலம்மலை மேவும் முகிலாய்விரைந்து வாகோடை மழையொன்றைத் தருவிப்போம்முத்தங்களைச் சொரிந்து. • ஏக்கத்தின் பெருமூச்சுவெப்பத்தின் தகிப்புநினைவின் தாழ்வாரங்களில்சொரியும் கண்ணீர்தணிக்க முயற்சிக்கிறதுநினைவழுத்தும் தழும்புகளைவருடிப்பார்த்துக் கொள்கிறேன்சேர்ந்து கொண்டதைவிடவும்சேராத காதல்களில்யுகங்கள் கனதியாய்நீ…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
செல்வசங்கரன் கவிதைகள்
அப்பாவின் முத்தங்கள் அப்பா தராத முத்தங்கள் என்னிடம்நிறையவிருந்தனசிக்கலான தருணங்களில் அவர்எனக்கு அதை கொடுக்க நினைத்திருந்தார்அந்த தருணமும் வந்ததுஅப்பொழுதுஎன்னிடம் மாற்றுவழியை பிரயோகித்தார்இப்படித்தான் என்னிடம்அப்பாவின் முத்தங்கள் வந்தனஅவர் தராத முத்தங்கள் என்பதால்எந்த ஒன்றிற்கும் கால்கள் கிடையாது. • ஞானி நிலை எனது காயங்களைத் திரும்பவும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சாய்வைஷ்ணவி கவிதைகள்
வெண்சுருட்டு சிற்றுண்டிக்குப் பிறகானவெண்சுருட்டின் மேல்பல நூற்றாண்டுக்கானகாதலை கொட்டிவிடுவார் அப்பாஉடன் தேனீர் கிடைத்தால்கூடுதல் அமிர்தம் கைப்பெற்ற தேவனாவார்எப்போதும் மாரில் தொட்டிலிட்டுஉறங்கும் வெண்சுருட்டுக்குழந்தைகள்பற்றும் கங்கை கிரீடமாகக்கொண்டுஅப்பாவின் இதழ்களில் சிம்மாசனமிடும்அம்மாவின் நிராசைகளில் ஒன்றுதானுமொரு வெண்சுருட்டாக மாறிஅப்பாவின் மாரில் ஊசலாடவேண்டிக்கொண்டதுசட்டைப்பை வெறுமையான நாட்களில்இலைச்சுருட்டு சிலகாலம் அப்பாவைஆட்கொண்டதும் உண்மைபின்னெப்போதோஉடற்கூராய்விற்குப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சமயவேல் கவிதைகள்
கவிகளின் பொருளாதாரம் அல்லதுஅன்பின் விலைப்பட்டியல் கவிகளின் பொருளாதாரம்என்னும் தலைப்பில்நாங்கள் பேசியதில்லை.பைசா பைசாவாககணக்கெழுதி செலவழிக்கத் தெரியாதசோம்பேறிகள்என்று திட்டிவிடுங்கள். இளம் வயதில் கிறங்கடித்தடென்னிசன் கவிதை வரி“கடைசிச் சொட்டு வரை அருந்துவேன்”எதையோ?ஆனால் எனக்குகடைசிப் பைசா வரை என்றாகியது. கவிதையில்முற்றுப்புள்ளிஎன்பது தேவையில்லைவாழ்தல் என்பதுநின்று நின்று சென்றாலும்எறும்பளவேனும் நகரும்நான்-ஸ்டாப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
இரண்டு உலகங்கள் எனக்கு குயில்கள் கூவுகிற சத்தம் கேட்கிறபோதுதான்அவசரமணிந்து அலுவலகம்கிளம்புவாய்.. வீட்டில் புதிதாய் பூத்த பூவை காட்டிபுன்னகையில் நனைக்கிற போதெல்லாம் கடுகடுப்பணிந்து தாமதாகிவிட்டதென்பாய்.. அவசரத்திற்கு வாழ்க்கைப்பட்டுஇரக்கமற்று கோலம் மிதித்துநேர சிறைக்குள் ஆயுள்கைதியாய்.. பாடலும் ஓவியமும் வேலையற்றநேரக்கடத்தலென்பாய்.. நமக்கே நமக்கான நேரத்தில்எதிர்காலம் சிந்தித்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ச.ப்ரியா கவிதைகள்
முரண்களின் மோதல்களில் வெடித்துச் சிதறுண்டது இருவருக்குமான மண வாழ்க்கை அவளை தண்டிக்கும் பொருட்டுஅவள் எப்பொழுதும் விரும்பி உடுத்தும் நீல நிற சரிகையில்வெண் பூக்கள் பதித்த அழகிய புடவை ஒன்றின்முந்தானை தலைப்பில் தூக்கிட்டு கொண்டான் இனி அவள் என்ன செய்வாள்அதற்கு இணையாக வேறொரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கண்ணன் கவிதைகள்
ஒரு வழிப்பாதை எதிர்வரும் என்னைப் பார்த்துமுகம் திருப்பிக் கொண்டாய்கம்பளிப் புழுவைக் காலால்நசுக்கியது போலகாலடியில் துடித்தடங்கும் மனசு • பொறுக்குத் தட்டிய புண்ணில்கை நகம் பட்டதும்பொங்கிவரும் குருதியாய்மேலெழும் நினைவுகள் • வாஷ்பேஷினில்வடியாது வழியடைக்கும்வாந்தியைப் போலஅழியாது நின்று போனதுன்உதாசீனங்கள் • பின்தொடரும் முகம் பிடிக்காமல்நீ…
மேலும் வாசிக்க