இலக்கியம்
-
சிறுகதைகள்
’தேம்ஸ் நதிக்கரையில்….’ – மோனிகா மாறன்
நரேன் சீக்கிரம் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிடேன். எத்தனை நேரம் காத்திருப்பது? எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் வாசனையும், ஸ்பிரிட் நெடியும் குமட்டிக்கொண்டு வருகிறது. எத்தனை எச்சரிக்கையாய் இருந்தும் தங்கிவிட்டதா? அதானால்தான் குமட்டலும் மயக்கமுமா? யாரிடம் இதை நான் சொல்லமுடியும்? உன்னைத் தவிர.…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
சாமந்திப்பூக்களை அதங்கும் கோணமூஞ்சிகள் – க.மூர்த்தி
வீட்டின் நடையில் உள்ள மேற்கூரையில் சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் புலக்கத்தில் இருக்கும். தலைவாணிக் கட்டைக்கு அடியில் கூளங்களை சேகரித்துக்கட்டிய கூட்டில் ‘விரிட் விரிட்’ டென குருவிகளின் இறகோசைகள் கேட்டுக்கொண்டே இருந்தன. கருங்காட்டில் சோளத் தட்டைகளை குத்திரி போட்டுக் கொண்டிருக்கும் தாத்தா பழனிமுத்துவுக்கு பழையது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அன்றிலன் கவிதைகள்
சொற்கள் உறங்கும் அறை நிகழ்தகவுகளின் நீட்சியாய் நிகழ்ந்தவொரு நிகழ்வின் வழியே விழுந்தவொரு விரிசலை ஒட்டும் வார்த்தைகளைத் தேடுகிறோம். முன்நின்றதும் தானாகத் திறக்கும் தானியங்கு கண்ணாடிக் கதவுகளைப்போல் அகமகிழ்வைத் திறக்கும் நிகழ்வொன்றை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். சாலையோர மரங்களில் உதிரக் காத்திருக்கும் பூக்களின் வாசனை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
ஆரஞ்சு மிட்டாய் – கிருத்திகா கணேஷ்
”ஏட்டி.. ஏ மாரி.. எந்திரி.. விடிஞ்சு நேரம் என்னாவுது?’ சத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சந்திரா தன் புடவையை அணைத்தபடி சுருண்டு படுத்துக் கொண்டு சலனமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் மகள் மாரிச்செல்வியின் முகத்தை அப்படியே நின்று பார்த்தாள்.. தாய்மை அவள்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பலகாரச்சீட்டு – ஜே.மஞ்சுளாதேவி
எங்கோ வெகு தூரத்தில் ஒரு வெடி வெடித்தது. நினைக்க நினைக்க கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது ராணிக்கு. கோசலையக்கா இப்படிப் பண்ணுவாள் என்று நினைக்கவேயில்லை. தீபாவளி நாளும் அதுவும் தனக்கு இப்படி விடிந்ததே என்று அடக்கி அடக்கிப் பார்த்தாலும் அழுகை நிற்கவில்லை. விடியற்காலையிலேயே…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அ.ரோஸ்லின் கவிதைகள்
காற்றை உட்கொண்டவன் ————- நாட்கள் தூசியைப்போல பறந்து கொண்டிருந்தன. அதன் ஒரு துகளாக அவள் மிதந்தலைகிறாள். நிறமழிந்த ஓவியம் என அவள் அன்பு உருமாறியிருப்பதை அவன் அறியாதவனில்லை. சின்னஞ்சிறு விலங்கின் பின்தொடர்தலாக அவளை அவன் கண்டுபிடித்திருந்தான் உண்மையின் அசைவுகளில் இடம் பெயர்ந்த …
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜீவன் பென்னி கவிதைகள்
பாதைகளின் முடிவில் துவங்கும் அன்புகள் 1. நம் உறவின் வெளிச்சத்தை சிறு அகலில் நிரப்பியிருக்கிறோம். ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு திசையைக் காண்பிக்கின்றன, அன்பு அதன் திசையிலிருக்கும் காலடிகளைத் தனியாகப் பின் தொடர்ந்து ஒரு ஓரத்தில் தனக்கானவற்றைக் கண்டுபிடித்துக்கொள்கிறது. 2. இந்தப் பாதைகள்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கா.சிவா கவிதைகள்
அதற்குப் பெயர் ————————— வார்த்தைகள் இல்லாததால் அல்ல குவளையில் தளும்பி நிற்கும் தேனில் எத்துளியை முதலில் எடுப்பதென திகைத்து நிற்கிறேன் பார்க்கப் பிடிக்காததால் அல்ல முழுவதும் பூத்த மலர்மரத்தில் எப்பூவை முதலில் பார்ப்பதென அசந்து நிற்கிறேன் பேசியும் நோக்கியும்தான் உணர்த்திட வேண்டுமென்றால்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
சோ.விஜயகுமார் கவிதைகள்
நாயொன்று வீட்டின் அருகே வரும்போது என்ன செய்யலாம் அதன் பற்களைக் கண்டு பயப்படலாம் ஓயாது அசையும் அதன் வாலைக் கண்டு சோர்வடையலாம் அதன் கால்களில் காய்ந்த சகதியைக் கண்டு சலித்துக்கொள்ளலாம் குரைக்கிற சப்தத்தை கேட்டு காதை மூடிக்கொள்ளலாம் விரட்டலாம் கல் எறியலாம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
யாழ் ராகவன் கவிதைகள்
எனது வேதனகளை மொழிபெயர்த்து பகர்கிறது அறையின் ஐந்தாவது சுவர் வெறுமையின் கோரம் கடித்த தனிமையின் மீது பீறிடுகிறது ரத்தம் நிகழின் தூக்குமேடையில் பிசுபிசுத்தபடி நிற்கிறது நிர்வாணம் கலையாத நிழல் காலைச் சுற்றி கழுத்தைக் கௌவிய மௌனத்திக்கு குரல்வளைக் குருதிக்கு முன்னேறுகிற அவசரம்…
மேலும் வாசிக்க