இலக்கியம்

  • சிறுகதைகள்

    உடலுறவு – சிசுக்கு

    “அடிபட்டுருச்சா?” கேட்டுக்கொண்டே அவர் கை தன்னிச்சையாக என் கால்களைத் தொட்டுப் போனது. “இல்லண்ணா…அதெல்லாம் ஒன்னும் இல்ல” உடனடியாக அந்த பதில் என் வாயில் உருவாகி இருந்தது. ஆனால் அந்த கை அந்த கை… பாசிப்பருப்பு மாவு போட்டு குளித்தது போன்றே எப்போதும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    தினகரன் கவிதைகள்

    பேச்சுலர்ஸை ப்ளார் என்று அறையும் பெருநகரம் ஒரு வழியாக நேற்றே வீட்டை சுத்தம் செய்தாயிற்று இன்னும் ஊறவைத்த துணிகளை மட்டும் துவைத்தால் போதுமானது அன்பு மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு வருவதேற்கே இதோ 9.13 ஆகிவிட்டது நேரமிருந்தால் ஏதாவது படம் பார்க்கலாம் அல்லது காமெடி…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    முறிந்த  சிறகுகள் – ஐ.கிருத்திகா

    “பித்தளை அண்டாவுல இருக்க கருப்பு மசிய அப்படியே வானத்துல கொட்டி ஒழுக விட்டுடுவா தேவதை. அதனாலதான் ராத்திரி இருட்டாயிடுது. அப்புறம் பகல் எப்படி வருது தெரியுமா….. தங்க சரிகை இழைகளால நெய்யப்பட்ட சல்லாத்துணியைத் தேவதை பூமியில விரிச்சு விட்டுடுவா. அதான் பகல்…….” துளசி கதை சொன்னாள்.…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ப.காளிமுத்து கவிதைகள்

    1. திருமண அழைப்பாக வெற்றிலை பாக்கு பூத்தட்டில் அமர்ந்திருக்கிறது வெற்றிலையின் சிவப்பை உடலில் பாய்ச்சிப் பின் காரத்தை மணிக்கட்டில் திலகமிடுகிறேன் காம்பைக் கிள்ளித் திண்ணும் அச்சிறுவனிடமிருந்து உன் நெற்றிவகிடைக் காத்திட வேண்டும் மொடாக்கிழவிக்கு நுனிகூட பார்வைக்கு கிட்டிடக்கூடாது வீட்டிலுள்ள எல்லா பாக்குகளுக்கும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதை – கமலதேவி

    என்ற ஒருவன் கூச்சம்…தயக்கம் திடுக்கிடல்… அவனை ஏற்பதில். இதுவரை பகிராத அவள் படுக்கையில் சாவகாசமாகப் படுக்கிறான்… துயிலெழுந்து குஞ்சாமணி ஆட்டி ஓடிவரும் அதிகாலை அவன். அன்பின் அவசரத்தில் அவள் கண்ணாடியை சுழற்றி வீசி முகத்தில் அடிக்கும் மயூரன். புத்தகங்களுக்கு பக்கத்தில் ஆமையும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ரப்பர் பால்பால் – விக்டர் ப்ரின்ஸ்

    சாலையில் நிறுத்திய காரிலிருந்து முப்பதைக் கடந்த ஒரு வெள்ளைகாரனும் அவனுடன் ஒரு இந்தியனும் எங்களை நோக்கி வந்தார்கள். பயிற்சியை நிறுத்தி விட்டு நாங்களும் பேசத் தயாரானோம். கடைசியாக நான் பேட்டிங் செய்தமையால் என் கையில் பேற் இருந்தது. புன்முறுவலுடன் அவன் எங்கள்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஆங்கிலேயர்களின் நன்கொடை – நவநீதன் சுந்தர்ராஜன்

    விரைவாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறி விட்டேன், வலது புறம் மட்டுமே ஆண்கள் அமர வேண்டும், என்ற சென்னை மாநகரப் பேருந்துகளில் கடை பிடிக்கும் விதியினை அறிந்திருந்தாலும், கண்கள் இடது புற இருக்கைகள் பக்கமே செல்கின்றன. இந்த அனிச்சை செயல், பெண்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சேஷம் – ராம்பிரசாத்

    இந்த உலகத்தைப் பொறுத்த வரையில் என்னுடையது ஒரு ‘தகாத’ உறவு. அரசாங்கங்கள் நான் தற்போது மேற்கொண்டிருக்கும் உறவுமுறையை ஏற்பதில்லை என்று முடிவுசெய்து மாமாங்கம் ஆகிறது. ஆனால், இப்படித்தானே ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை உறவுகளையும் ஏற்காமல் எதிர்த்தார்கள். ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் தன்பாலின…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    வேங்கை கடை இட்லி – ரமேஷ் கண்ணன்

    சனிக் கிழமைகளை ஏன் அவ்வளவு பிடிக்கிறது? அது ஞாயிற்றுக் கிழமைகளின் முதல் நாளாக இருப்பதால் மட்டுமே எனச் சொல்லி விடலாம். ஒரு வடிவியல் கணிதப் பிரதியின் உதவிப்படம் போல. கொடுக்கப்பட்டுள்ள புதிர்களிலிருந்து ஒரு பாதையை முன் தயாரிப்பது போல. இன்னும் பார்த்தேயிராத…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    செல்ல மழையும்….. சின்ன இடியும்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    அழுக்குப்பிடித்த அந்த வணிக வளாகத்தின் முதல் மாடியிலிருந்தது கூரியர் அலுவலகம். நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்குகிறேன் என்று சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வளாகத்தின் மேல் தளத்திற்குப் போவதற்காக இருந்த மாடிப்படிகளை ‘புல்டோசர்’ மென்று துப்பிவிட்டது. முதல் தளத்திலிருக்கும் எட்டுக்…

    மேலும் வாசிக்க
Back to top button