கவிதைகள்

  • இணைய இதழ் 125

    விஜி ராஜ்குமார் கவிதைகள்

    அறுதல் நெருப்புக் குமிழ்களினூடே தத்தளிக்கும்ஓரிரவில்…நிறமற்ற கனவிலிருந்தேன்.யானையின் துதிக்கை மீதேறிநெடுதூரப் பயணம்நேரிடாத வீதிகளில்உலவிக் கொண்டிருக்கும்மழலைகளின் கூச்சல்களில்ஓடிக் கொண்டிருக்கும் யானையின்மீதிருக்கும் இருப்புஉருண்டு கீழே விழுவதும்நசுங்குவதற்குமானசாத்தியங்களை ஆலோசிக்கும்போதேஅலுங்கல் இல்லாமல்ஆகப்போவதற்கான ஆவலுடன் இருக்கிறது. * உடைந்ததான ஒன்றைத்தேட வேண்டும்…மலையுச்சியிலும்ஆழ்கடலிலும் மட்டுமல்லாதுவீட்டின் பரணிலும்கிணற்று முகட்டின்கரையிலும் கூடகிடைக்கும்.கண்ணாடிச் சில்லுகள்மழுங்கியும்கூழாங்கற்கள்கூர்மையாகவும். *…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    வருணன் கவிதைகள்

    அத்தனை பவ்யமாய் அத்தனை அமைதியாய்அருகே அமர்ந்திருக்கின்றன ஏக்கங்கள்இரவின் இருட்டுக்குப் பொருத்திக்கொண்டுமூச்சுக் காட்டாமல்அடுத்த சில கணங்களுக்குள்மீதமின்றி விழுங்கக் காத்திருக்கும் குரூரம்துளியும் தெரியாத சர்வசாந்தம்மழைநிசிகளில் ஓயாதுநித்தமும் கரகரக்கும் நுணல்களின் அழைப்பொலிதேங்கிய நீரும் படர்ந்துள்ள இருளும்மீதமிருக்கும் வரை. * ஒரு வெற்றிடத்தைக் கொண்டுஇன்னொரு வெற்றிடத்தைநிரப்ப முடியுமெனும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    மனத்தரண் நான்சாதாரணக் கல்லே. ஆனால்உங்கள் பொறாமைதான் என்னுள்வைரம் இருப்பதைநிரூபிக்கிறது. ஆகவே,உங்களிடமிருந்துஎன்னைக் காப்பதேஎன் மீப்பெரு வேலை. * பலர் சேர்ந்து எழுப்பியஎன் தன்னம்பிக்கையெனும் மதிலைநீயொருவனாய்த் தகர்க்க முயல்கிறாய். அதன் வேர்கள்தொப்புள்கொடி வழியேபாய்ந்தவை! அதைஅந்தப் பலரும் கூடமுழுதாக அறிய மாட்டார்கள். இருந்தும்அவர்கள் இன்னும்சாந்தைக் குழைத்துத்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்

    ஒரு துண்டு வனம் காலைப் பனியில்வெடித்த பாறைகளுக்குஅருகேகாற்றாட அசையும் காந்தல் பூவின்உயிர்ச் சுடர்அந்தக் காட்டின்பரந்து விரிந்தவாழ்வை ஒருகணம் விழித்துக்காட்டியது. * மரம் முழுக்கவிரிந்திருக்கும்கொன்றைப் பூவில்மஞ்சள் வெயிலின்சாயல். * சுகவாசியாய்பகலில் எங்கு போய்மறைந்துக்கொள்கின்றனவோதெரியவில்லைமின்மினிகள் இருளைக் கண்டதும்காதலின் தவிப்போடுமின்னி மின்னி விரிக்கின்றனஒளியை. * krishnamoorthi973@gmail.com

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 124

    அருண் கொலட்கரின் கவிதைகள்

    தமிழில் ஆர் சீனிவாசன் ஆடு புலி ஆட்டம் யார் ஆடு யார் புலிஅது முக்கியமல்ல – என்றும்தவறாமல் ஒரே முடிவுதான்அவள் வெல்வாள்நான் தோற்பேன் ஆனால் சில சமயம்வேட்டை உச்சத்தில்மந்தை பாதியானபோதுஎதிர்பாரா இடத்திலிருந்துஉதவும் கரங்கள் வரும் –மேலிருந்து பெரும் போர்களைப் பார்த்த பெரியவன்எங்கள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 124

    கோபி சேகுவேரா கவிதைகள்

    வாம் – மனிதர்கள் மட்ட மதியானத்தில்ஒரு மரத்தடியில்நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலுக்குஉங்கள் பெருவாழ்வின்இரண்டு மணி நேரங்களையாவதுகொடுத்துவிடுங்கள்.சில நேரங்களில் நம்மைப் பற்றியோ,சில நேரங்களில் வருத்தங்கள் பற்றியோ,சில நேரங்களில் ப்ரியங்களைப் பற்றியோ,சில நேரங்களில் தவறிய முடிவுகள் பற்றியோ,சில நேரங்களில் அரசியல் பற்றியோ,இப்படி எதையாவது பேச, கேட்கநம்மிடம் இருக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 124

    வளவ.துரையன் கவிதைகள்

    செம்போத்து எதிர்வீட்டுப் பலாமரத்தைஎதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல்அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்தஒரு செம்போத்துஒரு காயில் உட்கார்ந்ததுஅத்தி பூத்தாற்போலகோடையின் பெருமழையாய்செம்போத்து இங்கு தோன்றும் உட்கார்ந்த அது இப்போதுஎன்னையே பார்த்தது அதன் முறைப்புமிகவும் பயமாயிருந்தது அதை நானும் கவனமாய்பார்க்காதது போலப்பார்க்கத் தொடங்கினேன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 124

    ரேகா வசந்த் கவிதைகள்

    சிலுவை! சுமக்கப் பணிக்கப்பட்டவனின்சிலுவையின் பாரம்அவன் பிள்ளையின் மீதும்சற்று அழுந்துகிறது!பொம்மைகளும் மிட்டாய்களும்பிடுங்கப்பட்ட பின்பு,பாரம் சுமப்பதுபிள்ளைக்குவாடிக்கையாகிறது!“அய்யோ பாவம்”என்ற ஒன்றைஉதிர்த்துவிட்டு,நடுக்கத்துடன் நகர்கிறார்கள்வேடிக்கை பார்ப்பவர்கள்!பால்யம் என்ற ஒன்றையேபழகாத,பாலகனின் கனவில்வந்து வந்து போகின்றனபறக்காத பட்டங்களும்!நனையாத காகிதக் கப்பல்களும்! கூண்டுப்பறவை! கூண்டில் பிறந்த பறவைக்குவானம்பாடியின் இசைக்கோர்வைகள்அந்நியம்!தொட்டுவிட முடியாஅதீத தூரத்தில்வானம்!இறகுபெரும் பாரம்!காற்றின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 124

    ப.மதியழகன் கவிதைகள்

    உயிரின் நிழல் 1எனக்கு இன்றுமரணத்தின் அறிமுகம் கிடைத்ததுஅது முகவரியற்ற கடிதம் போலஇன்று என்னை வந்தடைந்ததுஅது இரவு வானவில்லைப் போலகாணக்கூடியதாக இல்லைஅது இத்தனை ஆண்டுகள்பால்வீதியில் தொலைந்து போயிருந்ததுஅது சற்றுமுன் இதழ் விரித்தமலரை விட மென்மையானதாக இருந்ததுஅது மேரியின் கற்பை விடபரிசுத்தமானதாக இருந்ததுஇதுநாள் வரை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    ஸ்ரீதேவி மோகன் கவிதைகள்

    நாள்காட்டியைக் கிழிக்கும்போதெல்லாம்எழும் பெருமூச்சொன்று காதெட்டுகிறதுஇனிப்பு செய்யும் நாட்களில்உப்பாய் துளி கண்ணீர் சேர்கிறதுபூவினை முகர்கையில்தானே எழும் மெல்லிய புன்னகைவிரக்தியில் முடிகிறதுபண்டிகை நாட்களில் வாங்கிய துணிகள்அவளைப் போலவேஅவனுக்காகக் காத்திருக்கின்றனவிஷேசங்களுக்குச் செல்கையில்‘அவர் வரலையா?’ என்ற கேள்வியில்பூட்டி வந்த புன்னகை சிறிது சிதிலமடைகிறது‘உனக்கென்னமா, வெளிநாட்டுக் காசு’பந்தங்களின் வார்த்தைகள்…

    மேலும் வாசிக்க
Back to top button