கவிதைகள்

  • Jun- 2019 -
    27 June

    உயிருக்கு சேதாரமில்லை

    மற்ற வண்டிகளை விட லாரிகளுக்குத்தான் எத்தனையெத்தனை அலங்காரங்கள் ஜோடனை முகங்கள். அதன் சதுரக் கண்களில் வழிந்தோடும் மழையை உடைந்த வெள்ளை வளையலின் அரைவடிவில் துடைக்கின்றன ‘வைப்பர்’ கரங்கள். ஒரு பின்னிரவு பரதேசத்தில் கரங்கள் சோர்ந்திட கண்களில் அருவியிரண்டு அடர்த்தியாக கொட்டியது. தேசிய…

    மேலும் வாசிக்க
  • 6 June

    நீர்மலர்

    பனிப்பிரதேசமொன்றில் மேகங்கள் வழிந்தோடிய கரும்பாறையொன்றை அணைத்தபடி நெடுநேரமாய் நிற்கிறான். தளர்ந்து நிற்கும் அவன் தனிமைக்குள் மெதுவாகத் தன் முதுகின் ஈரத்தால் ஊடுறுவுகிறது கரங்களற்ற பாறை. மீள்வதற்கு வழியற்ற கார்கால இரவுகளில் மெல்ல இறங்கும் ஈரம் பிரிதுயர் நிறைந்திருக்கும் அவன் வீட்டுச் சுவர்களில்…

    மேலும் வாசிக்க
  • 6 June

    அவளுக்கு

    இருபதுகளின் கடைசியில் முதல்பிரசவம் குழந்தையின் தலைகொஞ்சம் பெரிதென கிழித்த இடத்தில் ஐந்தாறு தையல்கள் அதன் பெயர் சுகப்பிரசவம் . பின் அசந்தர்ப்பத்தில் உயிர்த்ததென அபார்ஷன் ஒருமுறை முதிர்ந்த முப்பதுகளில் .. “ரிஸ்க் வேண்டாம் சிசேரியன் நல்லது” அடிவயிற்றின் குறுக்கில் ஆயிரங்கால் பூரானென…

    மேலும் வாசிக்க
  • 6 June

    மிகச்சாதாரணமான நாளுக்காக ஏங்குபவர்கள்

    துளி மேகமற்ற கண்ணாடிவானம் மிதக்கின்ற நகரின் வேலைநாள். திருவாளர் xyz அவர்கள் வேறொருவரின் அலுவலக அறையில் காத்திருக்கிறார். ஆம்,அதே xyz தான். நகரில் சிறிய விசயங்களின் கடவுளான xyz க்கு இந்த காத்திருப்பு எரிச்சலாய் மாறத்துவங்கி இருபது நிமிடம் ஆகிறது. Xyz…

    மேலும் வாசிக்க
  • 6 June

    விசாரணை 

    சொல் உன் பெயர் என்ன ? ” சொற்கள் ” புரியும் மொழியில் பதிலளி தப்பிக்கலாம் ! ” கபாலத்திலிருந்து வெளியேறும் ஒளிப்பிழம்பில் மொழி இல்லை மின்னல்கள் தெறிக்கின்றன ” திமிராக நிற்காதே மண்டியிடு ! ” குரல்வளை தெரிகிறது குரல்…

    மேலும் வாசிக்க
  • 6 June

    நிராகரிக்கும் முன்முடிவு

    என் பிணத்திலிருந்து ஆதார் எண்ணை அழித்துக்கொண்டிருக்கிறேன் என் உடலெங்கும் அப்பியிருக்கும் காங்கீரிட் சாயலை கழுவிக்கொண்டிருக்கிறேன். என் கையிலிருக்கும் சொற்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடைத்துக்கொண்டிருக்கிறேன். ஏன் என்னால் சிலவற்றை கைவிட முடியவில்லை என் ஒழுங்குகளெல்லாம் என் அந்தரங்கமெல்லாம் என் தண்டனைகளெல்லாம் சில…

    மேலும் வாசிக்க
  • May- 2019 -
    6 May

    ஏகாந்த உற்சவம்

    முதிரும் இந்த இரவை தொடர்ந்து முன்னேறும் புலர்வுக்கு சற்றும் குறைவானதல்ல உனது நினைவு. மழையுண்ட பாதையில் உனது திருபாதத் தடத்தில் பச்சயம் பூத்திருந்தது. அதிலிருந்து பெருகிய வாசனை உன்னை உலகறியச்செய்தது. நளினம் மிளிர, தொடங்கிய அந்தியில் அலைசூழும் ஆழியைப்போல் நீ வருவதும்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    குளிர்

    வானத்து மின்சாரக் கம்பிகள் நாகமென கட்டிப் பிணைகையில் தெருவில் கரண்ட் இருக்காது. தகவல் தந்தும் கண்டுகொள்ளாத வயர்மேனுக்கு முழங்காலுக்கு கீழே எக்காயங்களுமில்லை. இருந்தாலும், ‘காந்துது, எரியுதுனு’ அழுகிறாறென்று EB ஆபிசில் எழுதிப் போட்டிருந்தார்கள். கோடையில் சீமெண்ணை ஊற்றி தன்னை வேகவைத்த மாரியக்காள்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    முரண்களே!!!

    குடும்பப் பணிவிடைகளுக்குப் பின் நண்பகலில் கழிப்பது காலைக்கடன் மிஞ்சியது வீணாகக்கூடாதென விழுங்குவதெல்லாம் உணவு கட்டிக்கொண்டவனிடமும் கொட்டிவிடா காமத்திற்குப் பெயர் கற்பு. படித்தவளின் சுயசிந்தையின்மையே அடக்கம். சிலிர்த்து சிலகாகிக்கும் மென்உணர்வு, வன்மையாய் உடலெங்கும் விரவுகையில் கர்ப்பிணியின் வயிற்றில் படரும் வெப்பக்கரத்தில் விரவும் குளிர்ச்சி…

    மேலும் வாசிக்க
  • 6 May

    சிறு திருக்குளம் பேசியபோது

    இருள் மிதக்கும் பரப்புக்கடியிலிருந்து வாலை உயரத்தூக்கி குனிந்திறங்கிய மீனின் அலட்சிய “ஹும்” எனக்கோ மேற்படிப் பூனைக்கோ. படிகளுக்கப்பால் நின்ற அரசமரம்  இலைவழிஉறவாடலில் அவ்வப்போது கேட்ட தட் தட் பகைதீர்த்த குறுவாள் ஒலி. படித்துறைக்கு மேலிருந்து இறங்கி இறங்கி ஏறுகிறது தூரத்து விளக்கொளி…

    மேலும் வாசிக்க
Back to top button