கவிதைகள்
-
Mar- 2019 -4 March
கிளிஞ்சல்
கீறிக் கிழிக்கும் கிளிஞ்சல்களை செதில் செதிலாக உடைத்த பாதங்கள் சுடுமணலில் குருதி குளிக்கின்றன அருகே ஆழ்கடலில் மூச்சடக்கி கிளிஞ்சல்களின் வயிற்றில் முத்துக்கள் பற்றிய கனவுகளைக் கோர்த்துத் திரும்புபவர்கள் வளர்ந்திருந்த பாசியை அறுக்க நரம்புகளைப் பிய்த்துக் கொண்டிருந்தனர் கரையில் நிர்வாணம் விரும்பாத நாவிழந்த…
மேலும் வாசிக்க -
4 March
நிலாகண்ணன் கவிதைகள்
இனி மண்ணின் சுகந்தமுணர்வேன் நீங்கள் எதற்காக அழுகிறீர்கள். — எல்லாம் கைவிட்டுப் போனதால் கால்விட்டுப் போனது நாற்காலி. — வெய்யில் நுழைய தரையுலர்கிறது ஈரம் மறைய மறைய ஒரே நடனம். — என்ன உணர்ந்தது எதை மறந்தது எதற்காக திரும்புகிறது இந்த…
மேலும் வாசிக்க -
4 March
பட்டாளத்தான் மனைவி
மணமுடித்த மறுமாதம் என்னைவிட்டு எல்லை சென்ற கணவர் கனவில் மட்டும் கட்டித்தழுவி… அவர் புகைப்படங்களை முந்தானையால் தினம் துடைத்து… கோயில் குளமெனக் கைகோர்த்துச் செல்லாமல்… கருவுற்ற செய்தியை கண்பார்த்துச் சொல்லாமல்…. தொலைப்பேசி திரையில் தெரியும் அவர் பெயருக்காகத்தான் என் ஒவ்வொரு நாளும்…
மேலும் வாசிக்க -
4 March
அகராதி கவிதைகள்
மிஸ் யூ தனித்த மௌனத்தின் கதறலில் நாசி கடந்த கனத்த மூச்சு பியானோவின் கருப்பு விசையில் விழுந்து ஒரு இசைத் துணுக்கை எழுப்பிச் செல்கிறது. .. அறையெங்கும் பரவிய அதிர்வினால் கன்னம் பரவிய கண்ணீரின் சூட்டிற்குள் உன் உட்கை வெப்பத்தின் இனிமை…
மேலும் வாசிக்க -
4 March
கவிஜி கவிதைகள்
முத்தமிடும் சிலர் கடிக்கிறார்கள் வெடிக்கிறார்கள் சுரண்டுகிறார்கள் சுவைக்கிறார்கள் தொடாமலே தருகிறார்கள் தொட்டெடுக்கிறார்கள் சிலர் தான் முத்தமிடுகிறார்கள்….! * இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் மேடையில் உங்கள் பின்னால் நிற்கும் மஞ்சள் புடவைக்காரியை மட்டும் நகர விட்டு விடாதீர்கள்..! * மீனுக்கும்…
மேலும் வாசிக்க -
Feb- 2019 -19 February
கவிஜி கவிதைகள்
விரல் நடுங்கும் மூன்றாம் கண் உங்கள் சந்தேகம் சரி தான் நீங்கள் முணுமுணுப்பதில் அர்த்தம் இருக்கிறது சரியோ தவறோ உங்கள் கணக்கு முகவாயில் கை வைத்திருக்கிறது வாட்சப்பில் பரப்ப விரல் நடுங்க நீங்கள் அமர்ந்திருப்பது தெரிகிறது அப்பட்டமாய் ஓரிரு சொல் காதில் விழுவதை…
மேலும் வாசிக்க -
19 February
இது எனது கடல்
கரையிலிருக்கிறேன் . இடப்பெயர்வுக்குப் பின்னான தசாப்த தனிமையுடன் நிசப்தித்திருக்கும் மலைக்கிராமத்தின் பிரதிமைகளாய் நிழலாடுகின்றன கையசைத்து விடைபெற்றவைகள். வெகுதொலைவானது கடல் என்கிறாய் இழந்தவற்றையும் கடல் என்கிறாய் .. உறுமும் அலைகளுடன் பேய் இரைச்சலாய் கொதித்தெழும் கடலின் கரையில் அன்றிருந்தோம் தீராத…
மேலும் வாசிக்க -
19 February
ரெட்டைப்பிறவி
இளசான இளநீர் வழுக்கையை கிழியாமல் மட்டையில் வழித்தெடுக்கவும் பூவுலகின் காதுமடல்கள் அவை — நொட்டாங்காதும் சோத்தாங்காதும் ரெண்டு மரப்பொந்துகள் அதிகாலையிலும் அந்தியிலும் ஒரே பறந்தடையும் சத்தங்கள் — தோடுகளற்ற காதின் துளைகளில் வெளக்கமாரும் வேப்பமரமும் செழிப்பாக வளர்கின்றன — அக்காதினுள் நீங்களும்…
மேலும் வாசிக்க -
19 February
மாவுத்தனை
1. சுருதி கூடக் கூடக் கொட்டி முழக்குகிற இசைக்கருவியின் கதறல் உரித்த தோலின் உடலுக்கானதும். 2. குன்னிமரக் கருப்பண்ணசாமி நேர்ச்சைப் பங்கு வராத பூசாரிக்குள் இறங்கியதேயில்லை அருள். 3. முல்லை நிலத்து முசுண்டையாய் யன்னலிலுன் விழி பார்த்த…
மேலும் வாசிக்க -
19 February
கோபி சேகுவேரா கவிதைகள்
இளையராஜாவோடு வாழ்தல் எப்போதும் இளையராஜாவோடு தொடங்கி இளையராஜாவோடு முடிவதாய் நம்பிச் சாகும் மனதிற்கு உணர்ச்சிகரம் பொங்கும் ரகுமானிடம் ஏதோ நிகழ்ந்துவிடுகிறது தற்கொலைக்கு தூண்டும் யுவன் குரலிடம் ஏதோதோ நிகழ்ந்துவிடுகிறது சிலபோது சில மௌனங்களில் சந்தோஷ் நாராயணனிடம் தப்பித்துவிட முடிவதில்லை நிறைய சந்தர்ப்பம்…
மேலும் வாசிக்க