சிறுகதைகள்
-
Sep- 2020 -22 September
அணில்குட்டி – காலச்சித்தன்
துரத்தி வரும் டைனோசரிடமிருந்து தப்பிக்க அப்பா சைக்கிளின் பெடலை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தார். அவரது நெற்றியிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவரது மூச்சுக்காற்று பலமாக அவனது உச்சந்தலையில் மோதியது. சைக்கிள் மலை முகடுகளிலும், ரயில்வே பாலங்களிலிலும், கடலுக்குள்ளும் ஓடியபோது அதன் பார்…
மேலும் வாசிக்க -
22 September
பூமி – ராம்பிரசாத்
கண்ணாடி ஜன்னலினூடே வெளியே பார்ப்பது என்பது, ஒரு அல்ட்ரா ஹை டெஃபனிஷன் தொலைக்காட்சித்திரையில் காட்சிகளைக் கண்பதைப் போலக்கூட இல்லை என்பதால் இப்போதெல்லாம் ஜன்னலைத் திறப்பது கூட இல்லை. தொலைக்காட்சியில் முன்பே சேமிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகளைத்தான் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டி உள்ளது.…
மேலும் வாசிக்க -
21 September
அஹல்யா – ஹரிஷ் குணசேகரன்
நாளை அவளைச் சந்திக்கப் போகும் தருணத்தை நினைத்து படபடப்பு தொற்றிக் கொண்டதால் படுக்கையை விட்டெழுந்து கெட்டிலில் காஃபி போட்டு கோப்பையை எடுத்தான். அதில் அவர்கள் எட்டு வருடங்களாகப் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் லோகோ இருந்தது. காஃபி வாசத்தை முகர்ந்து அதன் கசப்பை,…
மேலும் வாசிக்க -
21 September
கொலம்பஸ் – R.நித்யா ஹரி
“இரவு ஒன்பது மணிக்கு உன்னை சந்திப்பேன்.” இதுதான் இது மட்டும்தான் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.யார் அனுப்பியது என்று பெயரும் இல்லை, வேறெந்த குறிப்பும் இல்லை. அலுவலக முகவரிக்கு வந்திருந்தது ஆச்சர்யம். வீணா என்று என் பெயர் தெளிவாக எழுதி இருந்தது.…
மேலும் வாசிக்க -
21 September
வாடாமல்லி – கிருத்திகா கணேஷ்
உள்ளுக்குள் இருப்பதை சலனமற்ற ஓர் பார்வையிலோ ஒரு கீற்றுப் புன்னகையிலோ மறைத்து விடுகிற சாமர்த்தியசாலிகளைப் போல… உள்ளே இருந்த பரபரப்புக்கும் சலசலப்புக்கும் சற்றும் பொருந்தாத வேகத்தோடு நகரத்தின் பெரு நெரிசலான சாலையில் ஒரு நத்தையைப் போல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த…
மேலும் வாசிக்க -
21 September
ஃப்ரீசருக்குள் உறங்கும் வெய்யில் -நறுமுகை தேவி
1 கம்பளிக்கு வெளியே எட்டிப் பார்த்த கால் சுண்டு விரலைக் குளிர் தீண்டியது. அரவம் ஒன்று தீண்டியதைப் போல ஷ்ஷ்….என்றவாறு தன் கம்பளியை இன்னும் இழுத்துப் போர்த்தி கால்களாலேயே கச்சிதமாகத் தன்னைச் சுற்றிக்கொண்டு முக்காடிட்டுக் கொள்கிறாள். உறை சுற்றப்பட்ட சாக்லேட் போல்…
மேலும் வாசிக்க -
9 September
நிறைவு – கா.சிவா
பாரிமுனையிலிருந்து வில்லிவாக்கம் வரை வந்த பேருந்திலிருந்து தோளில் மாட்டிய பேக்குடனும், கையில் ஒரு நீலநிற பிளாஸ்டிக் கவருடனும் இறங்கிய கலா, சின்னம்மா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வழியில் கடையில் தென்பட்ட இளஞ்சிவப்பான தேன்மிட்டாய் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டாள். சங்கரைப்…
மேலும் வாசிக்க -
9 September
கருக்குவாள் – அண்டனூர் சுரா
இப்பெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க..? நீங்க கேட்கலாம். நான் பாப்பேன் சார். பெரிய எடத்துப் பிள்ளை நானு. என்னால் சாதி பார்க்காம இருக்க முடியுங்களா? இன்னைக்கும் என் குடும்பம் ஊர் உலகத்தால மதிக்கப்படுதுனா, அதுக்குக் காரணம் என்னோட தோட்டத் தொறவோ,…
மேலும் வாசிக்க -
9 September
டிடாட்டு னக்கு னக்கு – செல்வசாமியன்
அறையின் மெல்லிய இருளுக்குள் ஊதுபத்தியின் புகையைப்போல பரவிய கொட்டுச்சத்தம், ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த சேதுவின் காதுகளைப் போய்த் தொட்டது. அவன், கோழி இறகால் காதுக்குள் துளவியதுபோல சிலிர்த்துக்கொண்டு எழுந்தான். கண்களைக் கசக்கியபடி இமைகளைத் திறந்தான். மூடப்பட்டிருந்த ஜன்னலில் பிளேடால் கோடு…
மேலும் வாசிக்க -
7 September
போதம் – எம்.கே.மணி
பனி நீங்கவில்லை. முற்றுகை போட்டிருந்த மேகங்களின் நகர்வில் சூரியன் இருப்பது போல பட்டது. சுற்றியிருந்த குன்றுகளின் மீதும் தூரத்து கிராமங்கள் மீதும் அது பல வர்ணங்களை எழுத ஆரம்பித்தது. நான் அமர்ந்திருந்த புல்மேட்டின் மீதிருந்து எனது முகத்தில் சிதறிக் கொண்டிருந்த ஒளியை…
மேலும் வாசிக்க