சிறுகதைகள்
-
Jun- 2020 -20 June
அந்தக் கோடை விடுமுறை [மொழிபெயர்ப்பு சிறுகதை]- ஜான்ஸி ராணி
மூலம்: சமியா அடுட் தமிழில்: ஜான்ஸி ராணி அவள் அந்தப் பழைய குறுகிய நடைபாதையில் அக்கம்பக்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடும்போது, அந்தக் குழுவின் முக்கிய அங்கமாகவே தன்னை உணர்ந்தாள். தனது பள்ளித் தோழர்களிடம் அதனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி அவள் ஓயாமல்…
மேலும் வாசிக்க -
20 June
விலை ரூபாய் 200- கு.ஜெயபிரகாஷ்
கண்கள் அலைந்ததை விடவும் மனம் இரட்டிப்பு வேகத்தில் அலைந்து கொண்டிருந்து. எனக்கு 41ஆவது நம்பர் டோக்கன் கொடுத்தார்கள். குறைந்தது ஒருமணி நேரம் ஆகலாம் எனக்கான நேரம் வருவதற்கு. அதுவரையில் என்ன செய்வது? இங்கிருப்பவர்களின் முகங்களையும் அவர்களின் அசைவுகளையும் வேடிக்கை பார்க்கலாம், அல்லது…
மேலும் வாசிக்க -
20 June
செட்டிகுளம் போகவில்லை- நிவேதினி நாகராஜன்
02.01.2018 ‘செட்டிகுளம்’ என்ற பெயர் கொண்ட எழுத்துக்களின் வண்ணம் கொஞ்சம் அழிந்திருந்தது. அந்தப் பலகையின் மேல் அமர்ந்து பலர் அவர்களின் கால்களை ஆட்டிக் கொண்டிருந்ததினாலும், ஊரில் அப்பொழுது எதுவும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்ட அந்த மஞ்சள் பலகையும்,…
மேலும் வாசிக்க -
20 June
வீழ்ந்தவர்களின் புரவி -அகரமுதல்வன்
1. குடிசையில் இரண்டு சுட்டி விளக்குகள் சுடர்ந்தபடியிருந்தன. சுற்றப்பட்டு மூலையில் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த ஓலைப்பாயின் மேல் விளிம்பில் பல்லியொன்று நின்றது. குடிசையின் வாசலில் தொங்கியபடியிருக்கும் பெரிய மஞ்சள்நிற சங்கில் திருநீறு நிரப்பப்பட்டிருந்தது. மூத்தவர் எங்கு போனார் என்று தெரியாமல் காத்திருந்தான் வீரன்.…
மேலும் வாசிக்க -
20 June
வியாசை- பிரவின் குமார்
“டேய் எவ்ளோ நேரன்டா வெய்ட் பண்றது… கலை வருவானா மாட்டானா…?” வெளிப்புறம் பார்த்து ஆட்டோவில் அமர்ந்திருந்த அருண் சட்டென்று முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு கேட்டான். பல வருடங்களாகப் பழுதடைந்து போன கார்ப்பரேஷன் தண்ணீர் பம்பிற்கு அடியில் கவியும் சகாவும் செல்போனை…
மேலும் வாசிக்க -
20 June
உலகின் சாளரம் [மொழிபெயர்ப்பு சிறுகதை]- கயல்
Short story: A window to the world. Author: Issac Bashevis Singer (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்) திறமையுடன் எழுதத் துவங்கும் சில எழுத்தாளர்கள், விரைவில் வாசகர்கள், விமர்சகர்களிடையே புகழடைந்த பிறகு திடீரென நிரந்தரமாக அமைதியின் வசமாகி…
மேலும் வாசிக்க -
7 June
மூன்று முகம்- ராம்பிரசாத்
நகரின் பிரதானப் பகுதியில் ஒரு முடி திருத்தும் ஒப்பனை நிலையம். அங்கே தன் முன்னே அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் ஒரு முகப்பூச்சு திரவத்தை தடவிக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். அவளது கன்னங்கள் ஆப்பிளையும் ரோஜாவையும் இணைத்து இனப்பெருக்கம் செய்து உருவாக்கப்பட்ட ரோஜா இதழ்களையொத்த…
மேலும் வாசிக்க -
5 June
குமரி இளஞ்சிரிப்பு- கிருஷ்ண ப்ரசாத்
‘ராசாத்தி என் உசுரு என்னுதில்ல…’ என்று பாடத் தோன்றியது அவளைப் பார்த்தவுடன். அவள் என்னை கவனிக்கவில்லை. மொட்டை மாடிக்குத் துணி காயப் போட வந்தவள், “கண்ணழகா…” பாடலை மார்க்கமான குரலில் பாடிக் கொண்டே கொடியில் இருந்த க்ளிப்புகளைக் கழட்டிக் கொண்டிருந்தாள். அவள்…
மேலும் வாசிக்க -
5 June
நிஜமாத்தான் சொன்னேன் ஆனந்தி- செல்வசாமியன்
பேக்கிங் செய்த சாம்பிள் பீஸ்களை பாண்டியன் சார் டேபிளில் கொண்டு போய் வைத்தோம். அவர் அதற்காகவே காத்திருந்தது போல அதை எடுத்துக் கொண்டு பையர் ஆபீஸிற்குப் புறப்பட்டார். நாங்கள் அவர் பின்னாடியே கார் வரைக்கும் நடந்தோம். காரில் ஏறி அமர்ந்தவர் எங்களைப்…
மேலும் வாசிக்க -
May- 2020 -20 May
பருத்தி மூட்டை- விஜய் வேல்துரை
கோபி தன் குறும்படத்தின் கதையைச் சொல்லி முடித்து லேசாகச் சிரித்தபடி வேலனின் கருத்தைக் கேட்கக் காத்திருந்தான். வேலனின் முகத்தில் எந்த வினையும் இல்லை. கை விரல்களுக்கிடையில் கரைந்து கொண்டிருந்த சிகரட்டையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். “ப்ரோ கதை எப்படி, தாறுமாறா இருக்குதுல்ல?”…
மேலும் வாசிக்க