சிறுகதைகள்

  • Sep- 2019 -
    15 September

    நீலகண்டன்

    ஈர உடலைத் தழுவிய காற்றை உணர்ந்த நீலகண்டன், “எங்கியோ மழை பெய்யுது” என்று நினைத்தபடி தக்காளிப் பழங்களைப் பொறுக்கிக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த மேனகா, “இந்த அழிகாட்டு பழத்த யாரு வாங்குவாப்பா?”என்றாள். மஞ்சளும் பச்சையும் சருகுமாகத் தக்காளிச் செடிகள் வயலெங்கும்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2019 -
    31 August

    படுகொலை – சில குறிப்புகள்

    இருபது வயதைத் தாண்டிய அனைவருக்கும் அன்றைய நாள் மறக்கவே முடியாத ஒரு கனவைப் போல மனதில் பதிந்திருக்கும். நாடே அல்லோலகல்லோலப் பட்ட, மந்தமான வானிலையுடைய அந்த தினமும், அதிபரின் தன்னம்பிக்கை பிரகாசித்த அந்த முகமும் யாராலும் மறக்க முடியாதது. வெள்ளை மாளிகை…

    மேலும் வாசிக்க
  • 31 August

    க டை சி

    நேரம் இரவு 2 மணி ஆகப் போகிறது. பருவம் மாறி அடிக்கும் அடைமழை. குடித்த ‘ரம்’மின் தழல் மதமதப்பாக தணியத் தொடங்கியது. திருப்புவனம் பாலன் தியேட்டரில் ரெண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு  வரும்போதுதான் அந்த சம்பவத்தைப் பார்த்தேன். வீரமாகாளி கோயில் தோப்பு…

    மேலும் வாசிக்க
  • 31 August
    பானுமதி

    இதயம்

    கண்ணாடி இழைகளால் ஆன தடுப்புச் சுவரின் மறுபுறம் தெள்ளெனத் தெரிந்தது. படுக்கையில் சற்று சாய்ந்து படுத்தவாறு அவன் அந்த எலி என்று சொல்லப்படும் கருவியினையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்காக அது இதயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. நேற்று எடுக்கப்பட்ட நுண்ணிய இதய இயங்குப்…

    மேலும் வாசிக்க
  • 31 August

    மழை

    இந்து அறநிலையத் துறையிடமிருந்து வந்த அந்த கடிதம் கண்ட நிமிடத்திலிருந்து இருப்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம். வீட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ள சுவரின் ஆணியில் மாட்டப்பட்டிருந்த அங்கவஸ்த்திரத்தை கர்வத்துடன் பார்த்தார். என்ன நினைத்தாரோ என்னவோ, தூசி படிந்திருந்த வஸ்த்திரத்தை…

    மேலும் வாசிக்க
  • 17 August

    ஒரு பக்கக் கதை

    முகில் கடந்த மூன்று வாரங்களாக வீடு தேடிக் கொண்டிருக்கிறான். எதுவும் சரியாக அமையவில்லை. புலம்பியபடியே இன்றும் வீடு தேடும் படலம் முன்னிரவு தாண்டியும் தொடர்ந்து கொண்டிருந்தது. “என்ன முகில்… இது வரை 30 வீடு பார்த்திருப்போம்…. ஒன்னு கூடவா பிடிக்கல?” விஜி அலுத்துக் கொண்டாள்.…

    மேலும் வாசிக்க
  • 17 August

    ஆட்டக்காரங்கோ

    “டேய் ஊள எனக்கு கொக்கோகோலா கார்க் ஒன்னு கச்சுகிதுடா” பாந்தா கடையிலிருந்து கொட்டி விட்டுச் சென்ற குப்பையை நீண்ட நேரமாக கிளறிக் கொண்டிருந்த தரணிக்கு அதிஷ்டம் அடித்தது. வைரம் கிடைத்து விட்ட கணக்காய் முகம் மலர சோடா மூடியை வினோத்திடம் காண்பித்தான்.…

    மேலும் வாசிக்க
  • 17 August

    ஒரு இனிய நாள் – Ada Cambridge

    தாமஸ் போஹன் பிரபுவுக்கு இல்லற வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது. சொல்லப் போனால் அவனுக்குப் பெண்களிடத்தில் அலுப்பும் சலிப்பும் தட்டியிருந்தது. நாகரிகத்தின் சுவடுபடியாதவொரு நாட்டுக்குப் பயணித்து அங்கே சில வருடங்களைக் கழிப்பதன் மூலம் ஆடம்பர வாழ்க்கையினின்று விடுபட்டு, சற்றே ஆசுவாசங்கொள்ள எண்ணினான். அதனாலேயே…

    மேலும் வாசிக்க
  • 17 August

    முதலாவது பெண் மலையாளம்:சிதார.எஸ்

    பச்சை முந்திரியின் மணம். என் நீண்ட வருட நண்பன் ஒருவன் தற்கொலை செய்து கொள்வதைப் போலக் கனவு கண்டேன். நான் அப்போது கடற்கரையில் இருந்தேன். அலைகளும்,நுரைகளும்,வெய்யிலின் கொடுமையும் தீயாகக் கண்ணுக்குள் இறங்கத் துவங்கியிருந்தன. என்னைத் தவிர மற்ற எல்லாமும் ஓரங்க நாடக…

    மேலும் வாசிக்க
  • 16 August

    உயக்கம்…

    முப்பது வருடங்களுக்கு மேலாக காடுகளில் ஆடு மேய்த்தே தளர்ந்து போன மனிதர் சாமி. உகந்த நாயகன் குடிக்காட்டைச் சுற்றியுள்ள வறண்ட காடுகளில் சாமியின் காலடித்தடம் படாத நிலமில்லை. கையில் தூக்குச்சட்டியும், தோளில் அலக்கையையும் வைத்துக்கொண்டு முன்னாடி இவர் நடந்தால், சொல்லுக்கு கட்டுப்பட்டது…

    மேலும் வாசிக்க
Back to top button