கவிதைகள்

  • இணைய இதழ்

    பா.கங்கா கவிதைகள்

    குழையும் மென்காதல் ஹைவே ரோட்டில் மிக வேகமான பயணம்நிதானமாகவே ஒலிக்கிறது,“நலம் வாழ எந்நாளும்என் வாழ்த்துகள்” பாடல்விரைந்து நகரும் மரங்களோடுபோட்டியிட்டுக்கொண்டு முன்னேறும்நினைவுக்கு இன்னொரு பெயர்காதல்பூனையைத் தடவுவதுபோன்றமென்மையைக் குழைத்து மெல்லத் தடவுகிறேன்அதுவும் மயிர்க்கூச்செறிய மடியில் வந்துபடுத்துக்கொள்கிறதுஇளையராஜா தேய்ந்து தேய்ந்து மறையகாதலும் இசையின் வாலைத் தேடிமடியிலிருந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வருணன் கவிதைகள்

    சரசக் குடுவையிலிருந்து வழியும் ஒரு துளி இளைக்கிற உயிர்காமம் தின்று கொழுத்திருக்கிற காலம்ஊன் திரியில் உயிர் நெருப்பின் நடனமிடும் நிழல்தள்ளாட்டத்துடனே தளும்பிக் கிடக்கநினைவுகள் அத்தனையும் வெளியேற்றப்பட்டதிடலில் தனியொரு ஆட்டக்காரனாகஎத்திசையில் எது வருமெனத் தெரியாதபோதிலும்சிறகு வளர்க்கும் திசையறியாப் பறவையொன்றுஎங்கிருந்தேனும் வரக்கூடுமெனும்மெலிந்த நம்பிக்கையில் நின்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மதுசூதன் கவிதைகள்

    அவன் அடைத்த அறை அப்படி!வியர்த்தொழுகும் வாழ்வுவீசும் காற்று அற்பசுகம்கதவைத் திறந்தால் மாய நெடுஞ்சுவர்எங்கே வெளி? எங்கே வெளி?அங்கே புகுந்தால் நீயும் ஆண்டவன்சத்துவம் கற்றவன் சித்தனாகிறான்பித்து பரவசநிலைபித்தாகி நிற்கலாம்தான்பிற்பாடு என்ன செய்ய? **** மலை வரையும்போதோஅல்லதுஅதன் கீழ் ஓடுகிற மாதிரிஆற்றை வரையும்போதோ அல்லஒரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அனாமிகா கவிதைகள்

    அதோ அந்தப் பறவைதான் துக்கத்தின்போது பறவையைப் பார்த்தேன்அதன் இறக்கைகள் காற்றை அசைக்க முடியாமல்திணறிக் கொண்டிருந்தனமேகங்கள் கெட்டிப்பட்டுஎன் வேதனையின் முகங்களாய் மாறிப் போயிருந்தனசூரியனின் புற ஊதாக் கதிர்கள்அலை வடிவங்கள் கலைந்துநேர்கோடாய் பூமியின் தலையில்இறங்கி வந்தனவான்வழியெங்கும் மூச்சுத்திணறல் உண்டானபோதுபிரபஞ்ச விதி பிசகிதான்தோன்றித்தனமாக இயங்கத் தொடங்கியதுஇவற்றை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சாமி கிரிஷ் கவிதைகள்

    சாக்பீஸ் எனும் சக உயிரி கரும்பலகை எழுத்துகள்மென்மை போர்த்திய துடைப்பங்களால் அழிக்கப்படுவதுஉடல் தேயத் தேய எழுதியசாக்பீஸ்களின் தியாகம் போற்றியே. **** சாக்பீஸ்எத்தனை முறைஒடிந்து விழுந்தாலும்எழுத்து நடையை மறப்பதேயில்லை. **** சாக்பீஸ்களில் உடல்எழுத்தெலும்புகளால்ஆனது. **** சாக்பீஸ் மாவுசன்னமாய் அப்பியஆசிரியரின்ஆடை கண்டால்சிறகு முளைத்துவிடுகிறது சூழலுக்கு.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கே.பாலமுருகன் கவிதைகள்

    எதற்காக வந்தீர்கள்? வாடகைக்கு வரும்அனைவரிடமும் எதற்காக வந்தீர்களெனக்கேட்கிறார்ஒரு விநோதமானபதிலுக்காகக் காத்திருந்தார்அவருடைய செவிகள்பெருத்து வீங்கியிருந்தனநகரம் பதற்றமில்லாமல்அன்றாடங்களை நேர்த்தியாகக் கக்குவதுவருவோர் அனைவரின்கண்களிலும் பேச்சிலும் ஒளிர்ந்தது எதற்காக வந்தீர்கள்? தற்கொலை செய்து கொள்ள.ஆயிரம் ரிங்கிட் தருகிறேன்யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்சும்அந்தக் கண்களில் உயிர் வாழ்வதற்குரியபிரகாசமான வெளிச்சம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராமர் கவிதைகள்

    சேர்ந்தார்போல் பருத்த மேனி கொண்ட மூவர்புரண்டு படுக்க இடமற்ற இந்த அறையில்தான்அவர்கள் அடைந்து கிடக்கிறார்கள் மிளகு பருத்தியைச் சுமந்த யானையைக்கொண்டு வந்து நிறுத்திகொஞ்சம் இடம் கேட்டுக் கொண்டிருந்தான்என்னிலும் மூத்தவன் கரம்பை நிலத்தில் தட்டான்களை அவிழ்த்துவிட்டுமழை பெய்யச் செய்யும் மந்திரம் கற்றவன்ஒரு புலர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சிபி சரவணன் கவிதைகள்

    பயணியின் குரல் ஒரு ரயில் பிரயாணியாகக் கேட்கிறேன்ரயில் பயணம் என்றால் என்ன பிதாவே?பசித்த வயிறோடு புல்லாங்குழலில் நுழையும் காற்றுநெளிந்த காலுடையோளின் யாசகக் குரல்காதுகளால் பார்ப்போரின் குச்சி சத்தம்அதிகாலையில் சமைத்த சாம்பாரின் மணம்காதலர்களின் திருட்டு முத்தங்கள்எல்லாவற்றுக்கும் உச்சமாகஎந்த நிறுத்தத்தில் இறங்குவதெனத் தெரியாதுபயணிக்கும் என்னைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சுஜாதா செல்வராஜ் கவிதைகள்

    கண்ணாமூச்சி ரே ரே.. பழைய பெட்டியில் இருந்துகைக்கு கிடைத்ததுஜாதகப் புத்தகம் ஓரங்கள் லேசாகத் தேய்ந்திருந்தன அப்பாவின் முதல் எழுத்தைத் தாங்கி நின்றஅவளது பெயர்கொஞ்சம் வெளிறி வாழ்வைகட்டங்களில் கண்டுபிடிப்பதுஒருகிளர்ச்சிமிகு விளையாட்டுநமக்கு பத்துக்கு எட்டு பொருத்தம் என்பதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி போற இடத்தில் செல்வம்பெருகுமாம்கல்யாணக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்

    கசப்பு கலந்த காடி இது என்ரத்தமும் அல்லகண்ணீரும் அல்லஅதோ அந்தக் கசப்புக் கலந்தகாடியில் சிந்தப்பட்டிருக்கின்றன. **** அழுக்கு நீரில் விழுந்த நாவு அழுக்கு நீரில் விழுந்த நாவைமீண்டும் அதே இடத்தில் வைக்க பெருத்த அவமானம். **** புறாக் கண்களில் திரிபவன் புறாக்…

    மேலும் வாசிக்க
Back to top button