நவீன தமிழ் கவிதைகள்

  • கவிதைகள்

    கவிதைகள்- மித்ரா அழகுவேல்

    அடேய் மார்க்!!! முகஞ்சுழித்துக் கொண்டே முகநூல் வருகிறார் எதன்மீதும் பற்றற்ற எதன்மீதும் அன்பற்ற எதனோடும் ஒட்டாத பயனர் ஒருவர் அவரின் நகையுலர்ந்த இதழ்களில் வரிவரியாய் வெடித்து நிற்கிறது விரக்தி அன்பு வறண்ட மனங்கொண்ட விரலில் செதில்செதிலாய் பிளந்து விரிகிறது வெறுப்பு பாரபட்சம்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- மித்ரா அழகுவேல்

    மூன்று வீடுகள் நான்காம் முறையாகக் கூடிப் பிரிந்த பின் வாகாய் உடல் பரப்பித் தளர்கிறாள் தலைவி அந்தி மந்தாரைச் செடியொன்று அப்போதுதான் பூக்கத் தொடங்கியிருக்கிறது தீடீரென்று உள்ளொளி துலங்க மிணுங்கும் தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் முதல்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- கனிமொழி.ஜி

    கடல்  i) நிலத்தின் எல்லா ஒளியையும் நிறுத்தி விடும்போது கடல், யாருமற்ற அறையில் ஒரு பேரிளம்பெண்ணைப் போல உடலைத் தளர்த்தி மல்லாந்து படுத்திருக்கிறது… சின்னஞ்சிறு ஒளிக்கீற்றைக்கண்டாலும் மீண்டும் இறக்கைகளை அசைத்து அசைத்து பறக்கத் துவங்குகிறது. ********** ii) இரைந்திரைந்து அலையும் கடல்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

    கூழாங்கற்களிடம் பேசாதீர்கள் அடுக்கி வைத்து அழகு பார்ப்போம் ஆற்று நீர் அளவை அளக்க… நதியோடிய நீரில் புதைந்த கற்கள் மெல்ல வரும் வெயிலாடும் வெளிபோல.. ஆழமான இடத்தில் அழுத்தி வைப்போம் கல்லை தூணாகவே செய்து… வருடா வருடம் வழியும் நீர் ஆற்றை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- வருணன்

    1) நைஸ் DP துயிலெழும் இருபதாம் நூற்றாண்டுச் சிற்றோடை கரையோரம் விளையாடிய சிறுவர்களின் காலடித் தடங்களை மடித்து வைத்திருக்கிற அலமாரியைப் பார்த்தவாறு கண் விழிக்கிறது. தேநீர் சுவைத்தபடி மனக்கலக்கத்தில் இலக்கற்று கற்களைத் தன்னுள் சுண்டிய இளைஞனின் முகத்தை எதிரொளிக்கிறது. சிறுமியர் கட்டிய…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ரேவா

    1. சிறகுள்ள உயிர்க்காடு வெளிச்சமாக்கிக் கொடுக்கும் விலகல் நிரந்தரத்தின் சொல் அறையை நோட்டம் விடுகிறது அர்த்தங்களின் அறை நுழைய சென்று திரும்பும் மனம் மனம் திரும்பச் செல்லாத வழியாகிடும் பயிற்சிக்குப் பழக்க நிற்கிறோம் கால் கடுக்கக் கடுக்க முன் சொன்னவை முதல்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Jeevan benny

    கவிதைகள்- ஜீவன் பென்னி

                                                                         உறவொன்றை எளிதாகக் கைவிடுதல் 1. சொல்வதற்கென யிருந்த ஒரு பிரியத்தையும் கைவிட்டுவிட்டேன்  ஒரு பொய்யைத் திரும்பத்திரும்ப சொல்லிடும்  வலி மிகுந்த யிடத்திற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்.  ஒரு பைத்தியத்தைக் கைத்தாங்களாகப் பிடித்திருக்கும் யாரையேனும் கண்டால் உடனே அழுகை வந்து விடுகிறது.…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள் – இரா மதிபாலா

    #   01 காட்டுப் பூ —————- வேர்களின் குறு அறையில் தவம் முடிய வரம்  பெற விழிக்கையில் அடுக்ககத்தின் வரவேற்பறைக்கு கடத்தப்பட்டிருந்த மரத்தில் மலங்க, மலங்க விழித்தது காட்டுப் பூ. இருண்மையில் மறித்து கொத்தெனப் பிடுங்கி மேய அலைந்த தோள்களில் வாகாய்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்-உமா மோகன்

    1) திரும்பிவந்து பார்க்கும்போது நிச்சயமாக இவ்விடம்தானா எனச்சொல்ல முடியாதபடி எல்லாம் மாறிப்போய்விடுகின்றன தூரங்களைத் தாண்டுவது பாதுகாப்பு என்றிருந்த நாளில் பாழ்பட்ட மனைக்கு என்று எவ்விதப் பொருண்மையும் இல்லை கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் கற்றுத் தந்திருந்து கனத்தை புத்துருக் கொண்ட இடங்களில்…

    மேலும் வாசிக்க
  • கவிதை -இரா.கவியரசு 

    கிணற்றில் குதித்து விளையாடுதல்   மாமரத்தடியில் புளிய விதைகளை விழுங்கி பல்லாங்குழியைத் தோண்டி எடுக்கிறேன் கிடாவெட்டு முடிந்து வளையல்கள் ஒலிக்க அமர்கிறாள் அக்கா அவளிரு பிள்ளைகள் கைகளைப் பிடித்து இழுக்க அந்தரத்தில் மிதக்கிறாள்.   பல்லாங்குழியை மேலே சுழல விடுகிறேன் கிச்சுகிச்சு…

    மேலும் வாசிக்க
Back to top button