வாசகசாலை
-
இணைய இதழ்
பெரிய நாத்தி – பாஸ்கர் ஆறுமுகம்
சக்கராப்பம் தின்னும் போதெல்லாம், “பப்அ… ப்பா.. ப்பா…. ப்பா. பாப்டு….” என்று வாய் கொள்ளா வாஞ்சையுடன் அழைக்கும் ஊமை அத்தை ஏனோ நினைவில் வந்துவிடுகிறாள் அல்லது ஊமை அத்தையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் சுட்டுப் போடுற சக்கராப்பத்தின் தித்திப்பு அடித்தொண்டையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மகா நடிகன் – உஷாதீபன்
ரஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர்…
மேலும் வாசிக்க -
சாளரம்
சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் – வெ.கிருபாநந்தினி
“உனக்கென்னப்பா காட்டுக்குள்ள இருக்க, ஊர் ஊரா சுத்தற..” என என்னை அறிந்தவர்கள், குறிப்பாக எனது நண்பர்கள் என்னிடம் கூறுவது வழக்கம். “உன்ன நெனச்சு எங்களுக்குப் பொறாமையா இருக்கு” எனக் கூறுவார்கள். நான் அப்படி என்ன வாழ்க்கை வாழ்கிறேன் எனக் கேட்டால்..? நகரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 12 – கமலதேவி
மணிஒலி தயங்குக படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, வெஞ்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பூவிதழ் உமேஷ் கவிதைகள்
பறவைகளின் மூன்று வேலைகள் பள்ளி நண்பர்களைப் போல தோற்றமளிக்கும் சில பறவைகள் உண்டு அவை நாள்தோறும் மூன்று வேலைகளைச் செய்கின்றன துல்லியமான தருணத்தில் மரத்தின் ஓர் உறுப்பாக இருப்பது பறக்கும்போது மேகங்களைப் போல நடித்துக் காட்டுவது அப்பறவைகளின் பெயரிலேயே மீதம் வாழ்வது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜி.பி திரையரங்கம் – மிதுன் கௌசிக்
-நன்றி – ‘ஆருயிர் அண்ணன், ஆசான்’ சக்திவேல் .வி, ‘சினிமா மேஜிக்’ சிடி / டிவிடி கடை, வாழப்பாடி, சேலம். திரைப்படத்தின் துவக்கத்தில் முதல் ‘டைட்டில் கார்டில்’ இதைப் பார்த்தவுடனே அவனாகத்தான் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது. நான் திரையரங்கிற்குச் சென்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அணுவிலிருந்து தப்பிய ஒரு துகளின் கதை; 03 – ஜெகதீசன் சைவராஜ்
ஒளியின் ஈரியல்புத்தன்மை ஒருவேளை ஒளி என்கிற வஸ்து இல்லாது போயிருந்தால் இதை எழுதும் நானும், படிக்கும் நீங்களும், பூமியின் அனைத்து உயிரினங்களுமே கூட இல்லாது போயிருந்திருக்கும். ஒளியின் இன்றியமையாமையைத் தெரிந்துகொள்ள பூமியின் வரலாற்றையும் சூரியக் குடும்பத்தின் வரலாற்றையும் தேடிப் படிக்க வேண்டும்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபிகா நடராஜன் கவிதைகள்
எல்லைகளற்ற வெளிகளில் பறந்தலைகின்றன என் பறவைகள் கதவுகளற்ற கூடு அவற்றுக்கு மயிலும் குயிலும் வாத்தும் நாரையும் ஒன்றாகத்தான் வளர்கின்றன அவசியம் தவிர்த்து அவை ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை பட்டப்பகலிலும் வீட்டைப் பூட்டி தலையணையடியில் சாவியை வைத்து தூங்குவதில்லை அதன் தாய்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
விக்னேஷ்வரன் கவிதைகள்
மிஸ் யூ பொதுவெளியில் தவிர்க்கப்படுகிறது காலவெளியில் காணாமல் போகிறது காதலர்களால் கைவிடப்படுகிறது. ஒரு உறவின் ஆதியில் அது உதிப்பதே இல்லை உறவென்று சொல்ல எதிர்பிம்பம் இல்லாமலாகும்போது மிக மிக அவசரமாக அது தேடப்படுகிறது துர்க்கனவுகளின் முடிவில் ஒரு நிழல் போல அதை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நிழலி கவிதைகள்
இனிப்புக் கறை துவண்டு ஓடும் நரம்புகளை இழுத்துப் பிடித்துக் கைடிப்பிடிக்குள் திணித்து தாத்தாவின் வெள்ளை வேட்டியை வெளுத்து இன்னும் கொஞ்சம் வெண்ணிறம் படற உலர்த்தி மடித்து வைக்கிறாள் பாட்டி வேட்டியை உடுத்திக்கொண்டு வீதி வரும் தாத்தாவைப் பார்த்த பேரக்குழந்தை மிட்டாய் வேண்டுமென…
மேலும் வாசிக்க