வாசகசாலை
-
இணைய இதழ்
அது ஒரு கலை – நித்வி
சென்னையில் இருந்து மகன் வந்து இரண்டு நாட்கள் ஆகிறது ஆன போதும் மகனுக்கும் மருமகளுக்கும் கறி எடுத்து வாய்க்கு ருசியாக செஞ்சு போட முடியலயே என்ற ஒரு சின்ன வருத்தம் சுந்தரத்திற்கு. மகன் வந்திறங்கிய மறுநாளோ ஆயுத பூஜை அதற்கு அடுத்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
‘கைலி’ என்றொரு காலம் – இந்திரா ராஜமாணிக்கம்
காலம் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல பெயர்களோடு கூட உலாவரும். ‘கலர் சாப்பிடுறீங்களா?’ என்றொருமுறை தனக்கு அது பெயர் சூட்டிக்கொண்டிருந்தது. அப்போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு நிறமிருந்தது. சிலருக்கு மஞ்சள்,…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
வெற்றுப்படகு – காந்தி முருகன்
கட்டப்பட்டிருந்த கைகளில் கயிற்றின் இறுக்கம் சிறிதும் தளர்ச்சியில்லை. பஞ்சினால் ஆன கயிறாக இருந்தாலும் அக்கயிறு இறுக்கமாகத் திரிக்கப்பட்டு முறுக்கப்பட்டு பலமிக்கதாகத்தான் இருந்தது. கைகள் ஒன்றின் மேலொன்று பின்னிக் கொண்டு வலியை அதிகமாக ஏற்படுத்தியிருந்தன. நரம்புகள் ஒரு சேர புடைத்து தோள் பட்டை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பிங்க் நிற மயில் தோடு – பிரசாத் ரங்கசாமி
பூபதிக்கு வழக்கமாக இருபது தேதிக்கு மேல்தான் பற்றாக்குறை வரும். பிப்ரவரி மாதம் வருமான வரி பிடித்து விடுவதால் பதினைந்தாம் தேதிக்குள் சம்பளப் பணம் தீர்ந்து விட்டது. இனி வரும் பதினைந்து நாட்களை எப்படி ஓட்டுவது. யாரிடமேனும் கடன் வாங்க வேண்டிவருமா, இல்லை…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
ரசிகனின் டைரி;1 – வருணன்
சினிமா யாருக்குத்தான் பிடிக்காது. இலக்கியம் போல இல்லாம நேரடியா சினிமா நம்மளோட உணர்வுப்பூர்வமா உறவாடுறதால தான் பலருக்கும் வாசிக்கிறத விடவும் சினிமா பார்ப்பது ரொம்ப பிடிச்ச விசயமா இருக்கு. அதனால தான் உலகம் முழுசும் வாசகர்களை விடவும் பல மடங்கு சினிமாவிற்கான…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மெளனன் யாத்ரிகா கவிதைகள்
ஒரு பறவையால் மட்டுமே விதைக்க முடிந்த மரம் சமவெளி மக்களுக்கு மலையின் தேனும் கிழங்கும் மிளகும் பிடிக்கும் என்பது தெரியும் புதிதாய் அவர்கள் ஒரு மலரையும் கேட்கிறார்கள் கோடைப்பருவம் முழுக்க அந்த மலர் மலையை ஆட்சி செய்யும் தெய்வத்தின் கோடை வடிவம்…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் நேர்கண்டவர்: எழுத்தாளர் கமலதேவி கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அலகிலா – பிந்துசாரா
“கடலுக்குப் போறவங்களுக்கு தான் திரும்பி வருவோமா வரமாட்டோமானு தெரியாது. ஆனால் ஒண்ணு தெரியும், கடல் குடுக்கும்னு. கேட்டது கிடைக்கும். இல்லனா கேட்காதது கிடைக்கும். கடல் எப்பவும் எதையும் குடுக்காம விடாது. இது நம்பிக்கையினும் சொல்லலாம், இல்லைனா ஆசையினும் சொல்லலாம். ஆனால் இந்த…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பொதுக்கிணறு – கா.ரபீக் ராஜா
தெருவுக்குள் புதிதாக ஒரு வண்டி வந்திருந்தது. அது இயந்திரத்தில் ஓடும் வண்டி என்பதை நம்பமுடியாத அளவிற்கு மாட்டு வண்டியின் நவீன வடிவம் போல இருந்தது. மாட்டுக்கு பதில் முன்னால் ஒரு இயந்திர மோட்டார். அது சரியாக தெருவின் மையத்தில் இருக்கும் ஆலமரம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ரம்யா அருண் ராயன் கவிதைகள்
பிள்ளைத்தாயம் தன் அப்பன் கல்லறையில் குனிந்து கிடந்து ஐந்துபேர் துக்கித்து அழுத சமயத்தில் மல்லார்ந்து தாயம் விழுந்த ஒற்றைச்சோழியாய் குட்டிம்மா மட்டும் பல்வரிசையை ஆகாயம் காட்டி ஆடுகிற மேல்வரிசை முன்பல்லை அசைத்துக்கொண்டிருந்தாள் கையோடு வந்துவிட்ட பல்லை தகப்பன் குழியிலேயே குட்டிக்குழி செய்து…
மேலும் வாசிக்க