இணைய இதழ் 125
-
Jul- 2026 -7 July
ஆயிரம் டாலர் – ஓ ஹென்றி;
தமிழில்: கோ.புண்ணியவான் வழக்கறிஞர் தோல்மன் தீவிரமாகவும் கம்பீரத் தொனியுடனும் சொன்னார், “ஆயிரம் டாலர், இந்தா பணத்தைப் பெற்றுக்கொள்.” பணம் கைக்கு வந்த மகிழ்ச்சியில் மலர்ந்த புன்னகையுடனும், பதற்றத்துடனும் தன் விரல்களால் அந்த ஐம்பது டாலர் கட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டபோது யாங் கில்லியனின் விழிகள் ஒளிகொண்டன. “எப்படிச் சமாளிப்பது என்று குழம்பும் அளவுக்குப் பெரிய தொகைதான் இது!”…
மேலும் வாசிக்க -
7 July
என். ஸ்ரீராம் கதைகளின் மாயாதீதம் – ராணி கணேஷ்
நதிப்பிரவாகம் அமராவதியின் பெருஞ்சீற்றத்தை அருகிருந்து கண்ணுற வைக்கும் கதை. என்.ஸ்ரீராம் அவர்கள் எந்தக் கதைக் கருவாய் இருந்தாலும் அதில் தரவுகளைக் கண்டறிந்து தெளிவாக எழுதிச் செல்கிறார். இந்தக்கதையில்தான் எத்தனை வகையான சேவல்களின் பெயரை அடுக்கியுள்ளார். அவரின் கதைகளில் பூவாகட்டும், புல்லாகட்டும், பறவைகளாகட்டும்,…
மேலும் வாசிக்க -
7 July
புதைமணல் : பெருநகர மனங்களின் அலைவுறும் கணத் திரட்சி – ஞா.குருசாமி
எழுத்தாளர் அரவிந்தனின் ‘புதைமணல்’ நடப்புலகின் பெருநகர வெளிகளைக் களமாகக் கொண்ட வித்தியாசமான கதைகளின் தொகுப்பு. இதில் உள்ள பத்துக் கதைகளிலும் ‘அலைவுறும் மனித மனங்கள்’ பொதுவான அம்சமாக இருந்தாலும் ஒவ்வொரு மனங்களும் வாசகனைப் பார்த்து ‘நீதான் நான்’ என்று சொல்லும் படியான தொனியைச் சுமந்துகொண்டிருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் வாசகனை எதாவது ஓர்…
மேலும் வாசிக்க -
7 July
நுணுகிப் பார்த்தல் – மணி மீனாட்சிசுந்தரம்
“பார்க்கப்படும் நிலவைப் போன்றதல்ல சொல்லப்படும் நிலவு” பா.வெங்கடேசன் நுணுகிப் பார்த்தல் என்பது எப்போதும் ஒரு சிறந்த கவிதையின் சிறந்த பண்பாக இருக்கிறது. நுணுகிப் பார்த்தல் என்பதில் யாரும் காணாததைக் கவிஞன் காண்பதும், யாரும் கண்டவற்றுள் கவிஞன் கண்டடையும் தனித்த ஒன்றும்…
மேலும் வாசிக்க -
7 July
காலங்காலமான பெண்களின் கடுந்துயர் கதைகள் – அன்பாதவன்
கோணவாச்சி சிறுகதைகள் – ஆங்கரை பைரவி ஒரு படைப்பாளி தன்னைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்விலும், எந்த இடத்திலும் தனக்கான படைப்புத்தளத்தை கண்டறிய முடியும். அந்த வகையில் ஆங்கரை பைரவி டெல்டா பிரதேசக் காவிரிக் கரையின் எளிய கிராமங்களிலிருந்து, தனக்கான கதைக்களத்தை, கதை மாந்தர்களைக் கண்டடைகிறார். கண்ட நிகழ்வுகளை, மனிதர்களைப்…
மேலும் வாசிக்க -
7 July
ஷலோஷ் அரிமில் எய்த அம்பு – நிர்மல்
இருக்கிறேன். இருக்கிறேன் என்று தெரிகிறது. நான். நான் என்று தெரிந்த நொடியில் நகர வேண்டும் என்று தோன்றுகிறது. முடியவில்லை. என்னைத் தடுத்தது எது? அது என்னைத் தவிர வேறொன்றோ? என்னால் அதைக் கடக்க முடியவில்லை. நான் அல்லாத அது என்ன? பயம். …
மேலும் வாசிக்க -
6 July
தீபாவளி பரிசு – கலித்தேவன்
ஆடி மாதச் சூரியன் தன் திறன்களை இழந்து, வெளிர் மஞ்சளாக, கடும் மஞ்சளாக மாறி, சிவப்பேறி சிறுத்துத் தேய்ந்து மறையும் நேரம். கடைகளில் மின் விளக்குகள் ஏற்றும் தருணம். திடீரென மாயவனின் கைகளில் கிடைத்த அடர்த்தியான வண்ணங்களின் தீற்றலில் தெற்கு வீதியின் நிறங்கள் மாறி…
மேலும் வாசிக்க -
6 July
அந்தப் பத்து நிமிடங்கள் – காந்தி முருகன்
இந்த உடல் அருவருக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. உயிர் தன்னை நிலைநாட்டிக் கொள்ள இந்த உடலின் இருப்பு அவசியமாகிறது. என்ன வடிவமான உடலிது? தசைகள் என்ன கலவையில் ஆனதோ? உடலை உருவாக்கியவன் ஏன் அதில் உணர்வை வைத்தான்? உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தேவையைத் தீர்க்கப் பல கட்டுப்பாடுகள், பல கட்டமைப்புகள் உடனிருந்து ஆட்டிப் படைக்கின்றன. இருநாள்கள் ஓய்வின்றி உழைத்தாகிவிட்டது. இந்த உடலுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. சதைகள் இறுக்கிக்கொண்டிருக்கின்றன. அவை தளர்ந்திட வேண்டும். எலும்புகள் உடைபடுவதைப் போல ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. அவை எதிர்பார்க்கும் தனிமையை உண்டாக்கவில்லையெனில் என்னை நிரந்தரமாகப் பணி செய்திட விடாது. வயிற்றில் புகுந்துகொண்டு அங்குமிங்குமாக நடமாடி என் சிந்தனையைச் சீரழிக்கிறது காற்று. ஒரு ரொட்டித் துண்டையாவது வயிற்றில் இறக்கிக்கொண்டால் குறைந்தபட்சம் ஒன்று இரண்டு மணி நேரத்திற்காவது தாக்குப்பிடித்துக்கொள்வேன். உணவு வாங்கச் சென்றவனை ஆளையே காணவில்லை. இப்படியாக அந்த அறையைவிட்டு வெளியேற முடியாமல் மூன்று மணி நேரமாக மனதளவில் புலம்பிக்கொண்டிருந்த மைதிலி அறைக் கதவு தட்டும் ஓசைக் கேட்டு வயிற்றுக்கு ஓர் அன்பான அரவணைப்பைக் கொடுத்துவிட்டு ஓடோடிச் சென்று கதவைத் திறந்தாள். கையில் இரு பீர் போட்டல்களுடன் அருகில் நின்றவனைக் கண் ஜாடைக் காட்டி புன்னகைத்து நின்றான் தரகர்.
மேலும் வாசிக்க -
6 July
ஆசான் – உதயா சக்கரவர்த்தி
“ரவி மாஸ்டருக்குப் பத்திரிக்கை வச்சுட்டு போயிடலாமா?” கார் வெண்ணமலை அருகே வந்தபோது அப்பா கேட்டார். கார் ஓட்டிக்கொண்டிருந்த தயா, “இப்போ எங்க யூனிட் வச்சிருக்காருன்னு தெரியுமா?” “VVG நகர் பின்னாடிதான் வச்சிருக்காரு. போன தடவ வந்தப்போ பாத்தேன். பத்திரிக்கையோட வரேன்னு சொல்லிட்டு…
மேலும் வாசிக்க -
6 July
தலைமுறை மாற்றங்கள் – உஷாதீபன்
எந்தக் காரியத்தையும் சுறுசுறுப்பாகவும் திருத்தமாகவும் செய்யத் தெரியாத ஒரு ஜீவன் வாய் கிழியப் பேசுவதுதான் எரிச்சலை ஏற்படுத்தியது லோகநாதனுக்கு. எதையும் எடுத்துச் செய்யும் திறனில்லாத பெண்ணுக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்று நினைக்கத் தலைப்பட்டார். எந்த வீட்டு வேலைக்கும் பழக்காம, காரியார்த்தமாக…
மேலும் வாசிக்க