கவிதைகள்

  • Mar- 2024 -
    2 March

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    டாலியின் மீசை என் அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுமுன்பு ஒருநாள் இரவில் வந்து சென்றமையிருட்டுப் பூனையின் கவிச்சைஅதற்கு ஒரு ஜோடி மீசைகள் இருந்தனடாலியின் மீசையைப் போலவே. **** அழிக்கப்பட்ட ஏரிதன்னுள் மிச்சம் வைத்திருந்ததுஇருபதாண்டுகள் பழமையான தூண்டிலை.அழிபாடுகளின் நினைவடுக்கில்இன்னும் அத்தூண்டில்காலத்தைத் தக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறதுஇருபதாண்டுகள்…

    மேலும் வாசிக்க
  • 2 March

    ஷினோலா கவிதைகள்

    விரலிடை மணற்துகள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்றவிரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும்நழுவியது நீராய்விரலிடை மணற்துகள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும் தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவுபோய் விடுகின்றனஇந்த நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள் மட்டுமேமனதில்…

    மேலும் வாசிக்க
  • 2 March

    சுபி கவிதைகள்

    அதற்கென்றே ஒதுக்கப்பட்ட நாளின் சோம்பலில்புகார்ப்பெட்டிகள்திசைமாறி உருக்குலைந்த மேகமென‌நகர்ந்து போகின்றனஆடை விழுந்த தேநீரில்அதை மட்டும் தூக்கி எறிந்துவிட்டுருசிப்பதாகயதார்த்தத்தின் முதுகில் ஏறிப்பயணிக்கிறது அந்நாள்வரிசையில் நிற்கும் அடுத்தடுத்தபுகார்க் காகிதங்களின் ஜொலிப்புகள்முன் முதல் ஒன்று தேங்கியே கிடக்கிறது‌ முடை நாற்றத்தோடுஎதற்குமே நேரமில்லைஎன்றான பிறகு ஒரு காயத்திற்கும்இன்னொரு காயத்திற்கும்குறைந்தபட்சம்…

    மேலும் வாசிக்க
  • Feb- 2024 -
    16 February

    பா.கங்கா கவிதைகள்

    குழையும் மென்காதல் ஹைவே ரோட்டில் மிக வேகமான பயணம்நிதானமாகவே ஒலிக்கிறது,“நலம் வாழ எந்நாளும்என் வாழ்த்துகள்” பாடல்விரைந்து நகரும் மரங்களோடுபோட்டியிட்டுக்கொண்டு முன்னேறும்நினைவுக்கு இன்னொரு பெயர்காதல்பூனையைத் தடவுவதுபோன்றமென்மையைக் குழைத்து மெல்லத் தடவுகிறேன்அதுவும் மயிர்க்கூச்செறிய மடியில் வந்துபடுத்துக்கொள்கிறதுஇளையராஜா தேய்ந்து தேய்ந்து மறையகாதலும் இசையின் வாலைத் தேடிமடியிலிருந்து…

    மேலும் வாசிக்க
  • 16 February

    வருணன் கவிதைகள்

    சரசக் குடுவையிலிருந்து வழியும் ஒரு துளி இளைக்கிற உயிர்காமம் தின்று கொழுத்திருக்கிற காலம்ஊன் திரியில் உயிர் நெருப்பின் நடனமிடும் நிழல்தள்ளாட்டத்துடனே தளும்பிக் கிடக்கநினைவுகள் அத்தனையும் வெளியேற்றப்பட்டதிடலில் தனியொரு ஆட்டக்காரனாகஎத்திசையில் எது வருமெனத் தெரியாதபோதிலும்சிறகு வளர்க்கும் திசையறியாப் பறவையொன்றுஎங்கிருந்தேனும் வரக்கூடுமெனும்மெலிந்த நம்பிக்கையில் நின்று…

    மேலும் வாசிக்க
  • 16 February

    மதுசூதன் கவிதைகள்

    அவன் அடைத்த அறை அப்படி!வியர்த்தொழுகும் வாழ்வுவீசும் காற்று அற்பசுகம்கதவைத் திறந்தால் மாய நெடுஞ்சுவர்எங்கே வெளி? எங்கே வெளி?அங்கே புகுந்தால் நீயும் ஆண்டவன்சத்துவம் கற்றவன் சித்தனாகிறான்பித்து பரவசநிலைபித்தாகி நிற்கலாம்தான்பிற்பாடு என்ன செய்ய? **** மலை வரையும்போதோஅல்லதுஅதன் கீழ் ஓடுகிற மாதிரிஆற்றை வரையும்போதோ அல்லஒரு…

    மேலும் வாசிக்க
  • 16 February

    அனாமிகா கவிதைகள்

    அதோ அந்தப் பறவைதான் துக்கத்தின்போது பறவையைப் பார்த்தேன்அதன் இறக்கைகள் காற்றை அசைக்க முடியாமல்திணறிக் கொண்டிருந்தனமேகங்கள் கெட்டிப்பட்டுஎன் வேதனையின் முகங்களாய் மாறிப் போயிருந்தனசூரியனின் புற ஊதாக் கதிர்கள்அலை வடிவங்கள் கலைந்துநேர்கோடாய் பூமியின் தலையில்இறங்கி வந்தனவான்வழியெங்கும் மூச்சுத்திணறல் உண்டானபோதுபிரபஞ்ச விதி பிசகிதான்தோன்றித்தனமாக இயங்கத் தொடங்கியதுஇவற்றை…

    மேலும் வாசிக்க
  • 16 February

    சாமி கிரிஷ் கவிதைகள்

    சாக்பீஸ் எனும் சக உயிரி கரும்பலகை எழுத்துகள்மென்மை போர்த்திய துடைப்பங்களால் அழிக்கப்படுவதுஉடல் தேயத் தேய எழுதியசாக்பீஸ்களின் தியாகம் போற்றியே. **** சாக்பீஸ்எத்தனை முறைஒடிந்து விழுந்தாலும்எழுத்து நடையை மறப்பதேயில்லை. **** சாக்பீஸ்களில் உடல்எழுத்தெலும்புகளால்ஆனது. **** சாக்பீஸ் மாவுசன்னமாய் அப்பியஆசிரியரின்ஆடை கண்டால்சிறகு முளைத்துவிடுகிறது சூழலுக்கு.…

    மேலும் வாசிக்க
  • 16 February

    கே.பாலமுருகன் கவிதைகள்

    எதற்காக வந்தீர்கள்? வாடகைக்கு வரும்அனைவரிடமும் எதற்காக வந்தீர்களெனக்கேட்கிறார்ஒரு விநோதமானபதிலுக்காகக் காத்திருந்தார்அவருடைய செவிகள்பெருத்து வீங்கியிருந்தனநகரம் பதற்றமில்லாமல்அன்றாடங்களை நேர்த்தியாகக் கக்குவதுவருவோர் அனைவரின்கண்களிலும் பேச்சிலும் ஒளிர்ந்தது எதற்காக வந்தீர்கள்? தற்கொலை செய்து கொள்ள.ஆயிரம் ரிங்கிட் தருகிறேன்யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்சும்அந்தக் கண்களில் உயிர் வாழ்வதற்குரியபிரகாசமான வெளிச்சம்…

    மேலும் வாசிக்க
  • 1 February

    ராமர் கவிதைகள்

    சேர்ந்தார்போல் பருத்த மேனி கொண்ட மூவர்புரண்டு படுக்க இடமற்ற இந்த அறையில்தான்அவர்கள் அடைந்து கிடக்கிறார்கள் மிளகு பருத்தியைச் சுமந்த யானையைக்கொண்டு வந்து நிறுத்திகொஞ்சம் இடம் கேட்டுக் கொண்டிருந்தான்என்னிலும் மூத்தவன் கரம்பை நிலத்தில் தட்டான்களை அவிழ்த்துவிட்டுமழை பெய்யச் செய்யும் மந்திரம் கற்றவன்ஒரு புலர்…

    மேலும் வாசிக்க
Back to top button