கவிதைகள்
-
இணைய இதழ்
ரேவா கவிதைகள்
இலையுமில்லை காயுமில்லை பழுக்கத் தெரிந்த காத்திருப்பை காலங்காலமாக கையில் வைத்திருக்கிறது மனமுறிந்து கீழ் விழுந்த சருகுடைய ஓர் நாள் ஒட்டிப்பார்க்கும் பதற்றத்தைக் கொடுத்து விடுவதில்லை பச்சையம் நழுவி பூமி பார்த்த சொல்லொன்று அசைத்து அசைத்து அது நிகழ்த்தும் நாடகத்தில் காற்றுண்டு கட்டுக்கடங்காத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்
எலுமிச்சம் பழங்களுக்கு வயதாவதில்லை 1. எலுமிச்சம் பழமொன்றைக் கையில் எடுத்தேன் நான் சின்னஞ்சிறு வயதில் பார்த்து வியந்தது போலவே சீரான உருண்டை வடிவத்தில் இருந்தது சாறு பிழியும் முன்னர் மெல்ல உருட்டினேன் பால்யத்தில் நான் கண்ட அதே மினுமினுப்புடன் என் முன்னே கண் சிமிட்டியது இரக்கமின்றி இரண்டாய் வகுந்தேன் பதின் வயதில் ரசித்த அதே மணத்தை விரித்தது அதே ஆறு பிரிவான அறைகள் மிக மென்மையாக உள்சதை அல்லிகள் எல்லாமே எல்லாமே அப்படியே இருந்தன முதல் சாறு பிழிய மென்மையாய் அதக்கினேன் அப்போது வடியும் சாற்றின் நிறம் என் முதல் தூமையின் தினத்தில் பிழியப்பட்ட சாற்றின் வண்ணத்தைப் பிரதிபலித்தது கசப்பு கலக்காமல் சாற்றைப் பிழிந்தெடுக்க அரைவட்டத் துண்டங்களை மெல்லத் திருப்பி அல்லிகளை உடைத்துடைத்து சாற்றை ஒட்டப் பிழிந்தேன் கன்னிப் பருவத்தில் வெள்ளிக்கிழமை துர்க்கை முன் ஏற்றி வைத்த எலுமிச்சை அகல்களாய் இருந்தன இவ்விரு கிண்ணங்கள் எத்தனை முயன்றாலும் அவை கன்னி பருவத்திற்கு மேல் வளர்வதேயில்லை. *** என் பதின் வயத்தில் சாறு முற்றிலும் பிழிந்த பின்னர் அம்மாவிடம் நான் சொல்வேன் “எலுமிச்சைத் தோலை முகத்தில் தேய்க்கிறேன் முகப்பரு குறையுமாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுஷ்மா கவிதைகள்
ஏன் எழுதுகிறாள்? ஏன் எழுத வேண்டும்? என்ன கிடைக்கிறது? – என்கிறார்கள். ஊர் கூடுமிடத்தில் இருக்கும் ஒற்றைப் புளியமரம் எனக்கது! அதன் வேர் பிடித்துத் துயில்வேன், கிளை எண்ணிச் சுகிப்பேன், ஏதேனுமொரு பொந்திடை ஜீவன் ஒளித்துத் தேடுவேன், பறவையமர்த்தி அழகு பார்ப்பேன்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சபேஷா கண்ணதாசன் கவிதைகள்
மரியாதை கிடைக்காத இடத்தில் கால் கடுக்க நிற்கும்போது மூளைக்குத் தெரிகிறது இது அவமானமென இது புறக்கணிப்பென இங்கிருந்து சென்று விட வேண்டுமென்று ! நகரத் தயங்கும் கால்களுக்கோ கடமையின் குணம்..! அன்பின் மனம்..! **** மரம் சரிந்து வீழும்போதெல்லாம் சேர்ந்தே வீழ்ந்திடும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சத்யா சொக்கலிங்கம் கவிதைகள்
மௌனத்தின் சத்தம் என்னை எப்போதாவது நிசப்தத்தின் வழியே கேட்டதுண்டா? நான் எப்போதுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் உன் ஒலியை… *** உனக்கெனக் கூறுவதற்கென்றே ஓரிரு வார்த்தைகளை வைத்துள்ளேன் கூறாமலே நெடுநாள் கழிகிறது அவ்வார்த்தைகளின் கணம் கூடிக்கொண்டே போகிறது நிறைகொள்கலனை தாண்டிப் பெருகும்போது என்றாவது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
செல்வசங்கரன் கவிதைகள்
குரலின் உடம்பு இளவம் பஞ்சினை அதன் கூடு பிடித்திருந்ததைப் போல என்னுடைய குரலை உடல் பிடித்திருந்தது எது எங்கிருந்து கொண்டு பிடிக்கிறது என்றுதான் எனக்கு நாள் முழுவதும் யோசனை குரல்தான் இவ்வுடம்பில் உயிரோ என்று கூட நம்பிய காலங்கள் உண்டு மௌனத்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மரக்கா கவிதைகள்
அன்றொரு நாள் பாதி இருள் சூழ்ந்த அகலத் தெருவில் என் நிழலோடு நானும் நடக்க ஆயிரம் ஓட்டங்கள் மனதில் பசி வேலை குடும்பம் அடடா ! புளித்த தயிருக்குத்தான் எத்தனை தாளிப்பு வாயில் போட்டு காரி உமிழ்வதற்குள் குப்பைக்குப் போக சமயம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அக்னி பிரதீப் கவிதைகள்
உன் உள்ளங்கையில் முகம் புதைத்து நான் உறங்கியதில் என் பின்னங்காலில் விரல் பதித்து நீ அழுத்தியதில் விடுபட்டது தேகத்தில் தேங்கியிருந்த வேதனை உஷ்ணம் அதன் தடயங்களே தோலின் மீது சிவப்பு! *** அவன் எல்லாவற்றையும் அழகற்றதாக மாற்றினான் உலக அழகுகளனைத்தையும் குவளைக்குள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ம. கண்ணம்மாள் கவிதைகள்
முன்னிரவுப் பேச்சு…. அது ஒரு நவீன கேளிக்கைக் கூடம் பலரும் ஆங்காங்கே அமர்ந்தும், நின்றும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் குழைந்த மண் பல உருக்களை வனைவதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தல் போல ஒவ்வொருவரிடமும் ஒரு சொல் தொங்கி அசைந்துக்கொண்டிருந்தது அருள் வந்த சாமியாடி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சபேஷா கண்ணதாசன் கவிதைகள்
கடக்க வேண்டும் என முடிவான பின் தூரங்களின் நீள அகலங்கள் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லை நிலங்களில் தூரமென்றால் நடந்திடலாம் நீரினில் தூரமென்றால் நீந்திடலாம் காற்றிடைத் தூரமென்றால் பறந்திடலாம் மனங்களில் தூரமென்றால் பேசிடலாம் ஏனோ எல்லாத் தொலைவுகளையும் கடப்பதற்கு வழி கண்ட…
மேலும் வாசிக்க