கவிதைகள்

  • May- 2024 -
    18 May

    கலித்தேவன் கவிதைகள்

    இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையைக் கூட்டினவேண்டாம்! வேண்டவே வேண்டாம் இன்று நீ!ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்குபெறலாம்ஊர்வலத்தினூடே வெளியேறும் வெறுமையில்துடித்தடங்கும் இளமை தாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா? * கலைத்த தேன் கூட்டை விட்டுவெளியேறும் ரீங்காரம்அங்கே தொட்டு…

    மேலும் வாசிக்க
  • 18 May

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    நிலக்குறிப்புகள் சற்று முன் யாரோ சிந்தியஒரு துளி ஆனந்தக் கண்ணீர் விழுந்தஅதே இரும்பு நாற்காலியில்தான்அடுத்ததாய் ஆற்ற இயலாத                               வலிமிகு கண்ணீர்த்துளியொன்றும்நடைபாதை மெதுவோட்டத்தில்கண்டும் காணாமலும் கடக்கும் காலம்பெரிய கூழாங்கல்லும்சிறிய கூழாங்கல்லும் பதித்த சமவெளியில் தாங்கித் தாங்கி நடை பழகும்அவ்விரு இதயங்களும்எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்போதுஒன்றையொன்று சமாதானம் செய்வதுசட்டெனப்…

    மேலும் வாசிக்க
  • 1 May

    மழைக்குருவி கவிதைகள்

    இந்த உதடுகளை நீயே வைத்துக்கொண்டுஎன்ன செய்யப் போகிறாய் என்றுகேட்டதுதான் தாமதம் ஒரு அந்தரங்க பாகத்தைத் திறந்து வைத்திருப்பது போலஅத்தனை பதற்றமடைந்துவிட்டாய் நீ பிறகென்னைக் கடந்து செல்லும்போதெல்லாம்கைகளால் உதடுகளை மறைத்தபடிசெல்ல ஆரம்பித்தாய் மறைக்க மறைக்க ஒரு பாகம்மேலும் மேலும் அந்தரங்கமாகிவிடுகிறதுஎன்பதை உணராமல் சாதாரணமாகயிருந்த…

    மேலும் வாசிக்க
  • 1 May

    தமிழ்மணி கவிதைகள்

    பெயர் இந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக இருந்திருப்பேன்யார் சொல்லிக் கொடுத்தார்கள் இதனை இவ்வுலகிற்கு?பின்னாலே துப்பாக்கியுடன் துரத்துகிறதுஅசராமல் ஆடும் ஆட்டத்தை தினமும் செய்ய முடிவதில்லைபகீரங்கமாய் முன்வைப்பதை விட்டுவிட்டுஎத்தனை நாளைக்குத்தான் நானும் நசுக்கியே விடுவதுஇந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக…

    மேலும் வாசிக்க
  • 1 May

    சமயவேல் கவிதைகள்

    இலைமுகம் வெள்ளென வெளுக்கிறது தூய அதிகாலை.ஈர இதயத்தின் பனித்துளிகள்புற்களிலும்இலைகளிலும் பூக்களிலும்;எங்கெங்கும் நீர் தெளித்துக் கோலமிட்ட தெருக்கள்;காலியான,அனைத்தும் நிரம்பித் ததும்பும்ஒரு தூய சாலை;ஒரு விநோத இலையாகிறதுஎன் முகம்;நிச்சயம்பனித்துளிகள் அரும்பக்கூடும். ***** டைஹோ மால் நான் எங்கே இருக்கிறேன்?எங்கேயோ இருக்கிறேன் என்று கூற வேண்டியதில்லை.…

    மேலும் வாசிக்க
  • 1 May

    சாமி கிரிஷ் கவிதைகள்

    சமச்சீர் பயணம் சட்டை போன்ற ஒன்றைசட்டையென அணிந்திருக்கிறார்துண்டு போன்ற ஒன்றைதுண்டெனப் போட்டிருக்கிறார்முழுக்கால் சட்டை ஒன்றையும்அப்படியே உடுத்தியிருக்கிறார்அவரது அழுக்குகள் குறித்துஉங்கள் குரல்வளையில்நெளியும் வார்த்தைகளைஅங்கேயே அடக்கம் செய்துவிடவும்பட்டுவிடாமல்ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள்நெரிசல்மிகு நகரப் பேருந்தின் குலுங்கலில்தகிக்கும் வெக்கையில்சிலையென உறைந்து நிற்பதற்குமுயற்சி செய்யலாம்வேறு ஒன்றும் முடியாதுஅவரிடமும் இருக்கிறதுபேருந்துக் கட்டணமானஇருபது…

    மேலும் வாசிக்க
  • Apr- 2024 -
    16 April

    அழகிய பெரியவன் கவிதைகள்

    ஒரு சிறு சிமிர்போதும் அமர்வதற்கு ஒரு சிறு கிளைபோதும் கூட்டுக்கு ஒரு சிறு இலைபோதும் குழந்தைக்கு கிட்டுமாபறவை வாழ்க்கை? **** புவி மேல்கவியும்வான் கண்ணாடிக்குடுவையில் படிந்திருக்கிறதுமேகச் சாம்பல் ஒரு மயில் கொன்றைசிவந்த பூப்பிழம்புகளால்மூட்டுகிறது தீயை மண்ணறை விடுத்துமொலு மொலுவெனஎழும்பும்ஈசல் விட்டில்கள்ஒளிப்பூக்களைஅண்டப் பறக்கின்றன…

    மேலும் வாசிக்க
  • 16 April

    க.பிரபுசங்கர் கவிதைகள்

    தோழியொருத்தியின் குட்டி மகள்பூப்பெய்து விட்டாளென்றநற்செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதுஇன்றைய நாளின் முதலழைப்புநேற்றைக்குத்தான்மகள் பிறந்திருக்கிறாளெனபுன்னகை வழிய சேதி சொல்லியதாகநினைவுப்படுத்துகிறதுகணக்குகள் தெரியாத மூளைதளிருக்கும் பூவுக்குமானஇடைவெளியில்அவள் எடை கூடித் தளர்ந்திருக்கிறாள்நான் நரை கூடி வளர்ந்திருக்கிறேன்வாழ்வு அதே இடத்தில்சுழன்று கொண்டிருக்கிறது. **** சத்தியமாகச் சொல்கிறேன்இந்தக் கணம் வரைமிக இயல்பாகத்தானிருந்தேன்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    லஷ்மி கவிதைகள்

    ஏதோ ஓர் வாசனைதுரத்துகிறதுசாலையில் செல்லும் வாகனங்களை அவசரமாகச் செல்லவேண்டுமென நினைக்கும்மனதின் வெப்பம் எதற்காக வாழ்கிறோம்என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்அந்த மனம் பிறழ்ந்தவனின்அழுக்கு மரங்களின் மீதமர்ந்து எச்சமிடும் காகங்கள் எங்கோ பழுத்திருக்கும் இலுப்பைப் பழத்தின் வாசனை ஓடி உழைத்துவிட்டு வீடு திரும்புவோரின் வியர்வை…

    மேலும் வாசிக்க
  • 16 April

    ச.மோகனப்ரியா கவிதைகள்

    முப்பரிமாணத்தினுள் ஒரு பயணம் தரைத்தளத்தில் சாய்த்து வைக்கப்பட்டஆளுயர நிலைக்கண்ணாடிஎவ்வீட்டின் ஒளியையோஇன்னும்தாங்கிக் கொண்டிருக்கிறது. நிராகரிப்பின் சுவடுகள்கீறிடாத ரசம் மின்னும்வெயில் பொழுது அந்திக்குள் நகர்த்தப்படும் இருப்பில்முகம் திரும்பாது ரசிக்கிறது தன்முன்னே நகரும் மனிதர்களை; வீழும் ஒலிகளை; காற்றின் ஸ்பரிசங்களை; பசிக்கிறதா? சில ஆண்டுகளாகஉருவங்களால் நிறைந்த…

    மேலும் வாசிக்க
Back to top button